சென்னை, ஜூன் 21–-
நார்வே நாட்டில் நடந்த ரோபோக்கள் போட்டியில் வி.ஐ.டி. சென்னை மாணவர்கள் 2-ம் இடம்பிடித்து சாதனை படைத்தனர்.
சென்னை வி.ஐ.டி. தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்று அதில் நிபுணத்துவம் அடையும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த சிறப்பு குழுக்கள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றன.
அந்த வகையில் நார்வே நாட்டில் உள்ள ரோகாலாந்தில் கடலுக்கு அடியில் ரோபோக்களை இயக்குவதற்கான போட்டிகளை டி ஏ யு தன்னாட்சி மையம் கடந்த 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடத்தியது. விஐடி சென்னையில், மாணவர்கள் தொழில்நுட்பங்களை கற்று நிபுணத்துவம் அடைய தொழில்நுட்பக் சிறப்புக் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த சிறப்பு குழுக்கள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வென்று வருகின்றன. இதில் வி.ஐ.டி. சென்னையின் ‘‘தி டிரெட்நாட் ரோபோட்டிக்ஸ்” அணியை சேர்ந்த 20 பேர் கொண்ட மாணவர்கள் குழு, பேராசிரியர் கருணாமூர்த்தி தலைமையில் பங்கேற்றது. இந்த போட்டியில் 13 சர்வதேச அளவிலான அணிகளை சேர்ந்த 200 மாணவ- – மாணவிகள் கலந்து கொண்டனர்.
கடலுக்கு அடியில்எண்ணெய் குழாய் ஆய்வு செய்தல், பொருட்களை அடையாளம் காணுதல், அடைப்பான்களை எடுத்து இயக்குதல், பொருந்தும் நிலையத்துக்கு வந்தடைதல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ரோபோக்கள் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வி.ஐ.டி.யின் சென்னை அணி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்களை நார்வே நாட்டுக்கான இந்திய தூதர் அகினோ விமல், தூதரக அதிகாரி பிரேம் பிரகாஷ் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்தினார்கள்.
இப்போட்டியில் பங்கேற்றது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக அமைத்ததாகவும், வரவிருக்கும் நிகழ்வுகளில் விஐடி சென்னை மாணவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்புவதாகவும் குழு ஒருங்கிணைப்பாளர் கி. கருணாமூர்த்தி கூறினார். “மாணவர்கள் பெற்ற அனுபவம், கடல் அடியில் ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் புதிய பரிமாணத்தை வகுக்க உதவும்” என்றார். மேலும் இத்தகைய பங்கேற்புகளை ஆதரிக்கும் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் அனைத்து நிர்வாக அலுவலர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
போட்டியில் பங்குபெற்று 2-ம் இடம் பிடித்த வி ஐ டி சென்னை மாணவர்களை வி.ஐ.டி.நிறுவனர் ஜி விஸ்வநாதன், துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன், வி.ஐ.டி.சென்னையின் இணை துணைவேந்தர் டி.தியாகராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.