செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவித்தொகை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்

நாமக்கல், பிப். 11–

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில், கைங்கர்யப் பணியின் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகை காசோலையை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் பணியாற்றிய அர்ச்சகர் வெங்கடேசன் கடந்த ஜனவரி 27– ந்தேதி அன்று தவறி விழுந்து மரணமடைந்ததையடுத்து, 1.2.2019 அன்று அமைச்சர் பி.தங்கமணி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் தவறி விழுந்து இறந்த அர்ச்சகர் வெங்கடேசனின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில், கைங்கர்யப் பணியின் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு கோயில் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க 9–ந் தேதி உத்தரவிட்டதையடுத்து, அமைச்சர் பி.தங்கமணி, வெங்கடேசன் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை நேரில் வழங்கினார்.

இந்த நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தா.வரதராஜன், உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *