வாழ்வியல்

நானோ பிளாஸ்திரி மூலம் 12 நாளில் ஆறக் கூடிய காயத்தை 3 நாட்களில் குணப்படுத்திவிடலாம் என்று கண்டுபிடிப்பு

நானோ பிளாஸ்திரி மூலம் தோல்நார்கள் (fibro blasts) அதிகமாக தூண்டப்படுவதால் 12 நாளில் ஆற்றக் கூடிய காயமொன்றை 3 நாட்களில் குணப்படுத்திவிடலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்போது உங்கள் தழும்புகளை நானோ-பிளாஸ்திரி மூலம் விரைவாக நீக்கிக்கொள்ளலாம் .

இதற்கு ஆதாரம்: அமெரிக்க இரசாயனவியல் சமூகம்.

மனிதத் தோல் இயற்கையாகவே தம்மை குணப்படுத்திக் கொள்ளக்கூடியது. எனினும் அது மெதுவான ஒரு செயற்பாடாகும்.

மேலும், காயங்கள் மூலம் நுண்ணங்கிகள் தொற்றக்கூடிய வாய்ப்புகளும் அதிகம். எனவே இதற்கான ஒரு தீர்வாக அமெரிக்க இரசாயனவியல் சமூகம் நானோ தொழில்நுட்பம் கொண்ட பிளாஸ்திரி ஒன்றை தயாரித்துள்ளது. இது polytetrafluoroethylene (PTFE), செப்பு மற்றும் polyethylene terephthalate (PET) இனாலானது.

இப்பிளாஸ்திரியில் நானோ அளவிலான மின் கடத்திகள் உள்ளன. இவை உங்கள் உடலின் வெப்பத்தையும் அசைவுகளையும் உடலுக்கு ஆபத்தில்லாத மின்னோட்டமாக மாற்றி காயத்துக்கு குறுக்காக செலுத்துகிறது. இதனால் காயம் விரைவான முறையில் குணப்படுகிறது.

எலிகளின் மீது செய்த பரிசோதனையில், நானோ பிளாஸ்திரி 12 நாளில் ஆற்றக்கூடிய காயமொன்றை 3 நாட்களில் குணப்படுத்தியுள்ளது.

நானோ பிளாஸ்திரி மூலம் தோல்நார்கள் (fibroblasts) அதிகமாக தூண்டப்படுவதால் இவ்வாறு நடைபெறுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

விரைவில் இவற்றை நீங்கள் சந்தையில் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *