வாழ்வியல்

நானோ தொழில்நுட்பம் அல்லது மீநுண் தொழில்நுட்பம் என்றால் என்ன?

மூலக்கூறு அளவில் பொருள்களைக் கையாளுவது

நானோ தொழில்நுட்பம் அல்லது மீநுண் தொழில்நுட்ப தொழிற்கலை ஆகும்.

தொடக்கநிலை மீநுண் தொழில்நுட்பம் சில குறிப்பிட்ட தொழில்நுட்ப இலக்குகளை ஒட்டியது.

பெரிய அளவிலான பொருள்களையோ கருவிகளையோ செய்ய துல்லியமாக அணு அளவிலும் மூலக்கூறு அளவிலும் பொருள்களைக் கையாண்டு செய்யும் முறையே மீநுண் தொழில்நுட்பம் ஆகும். இது இப்போது மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்பம் எனப்படுகிறது.

பரு அளவில் வரையறுக்கப்படும் மீநுண் தொழில்நுட்பம், அறிவியலில் மேற்பரப்பு அறிவியல், கரிம வேதியியல், மூலக்கூற்று உயிரியல், குறைகடத்தி இயற்பியல், நுண்புனைவியல், மூலக்கூற்றுப் பொறியியல் போன்ற பல புலங்களை உள்ளடக்குகிறது.

எனவே இத்துறை சார்ந்த ஆராய்ச்சியும் பயன்பாடுகளும் பல்திறத்தனவாக, மரபியலான குறைகடத்திக் கருவி இயற்பியலில் இருந்து முற்றிலும் புதிய அணுகுமுறைகள் வாய்ந்த மூலக்கூற்றுமுறைத் தன்பூட்டுதல் முதல் மீநுண் பொருள்களை உருவாக்கல், நுண் தொழில்நுட்பம், மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்பம் என, நேரடி அணுவியல் மட்டக் கட்டுபாடுள்ள புலங்கள் அனைத்திலும் பரந்து விரிந்தமைகிறது.

அறிவியலாளர்கள் அன்மையில் மீநுண் தொழில்நுட்பத்தின் தொடர்ந்த எதிர்கால பின்விளைவுகள் பற்றி விவாதித்து வருகின்றனர். இது மீநுண் மருத்துவம், மிநுண் மின்னணுவியல், உயிரிப்பொருள்வழி ஆற்றலாக்கம், நுகர்பொருட்கள் போன்ற அகன்ற விரிவான மீநுண் தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான பல புதிய

இதன் தாக்கம் உலகப்பொருளியல் மீதும் அமைவதோடு பல அழிவுநாள் வரம்புநிலைகளையும் உருவாக்க வல்லதாக உள்ளது. இந்த அக்கறைகள், மீநுண் தொழில்நுட்பத்தைப் பரிந்துரைப்போருக்கும் உலக அரசுகளுக்கும் இடையில் சிறப்பு மீநுண் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை உருவாக்குதல் தேவையா எனும் விவாதத்தைக் கிளப்பிவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *