செய்திகள்

‘நானே நேரில் சந்திக்க வருகிறேன்: என்னை சந்திக்க சென்னை வர வேண்டாம்’

Makkal Kural Official

தி.மு.க.வினருக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

சென்னை, அக்.1-

என்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம். நானே நேரில் சந்திக்க வருகிறேன் என்று தி.மு.க.வினருக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் சென்னைக்கு வருகிறார்கள். அவர் வசித்து வரும் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கருணாநிதியின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச்செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி, கட்சி பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னை சந்திப்பதற்காக சென்னைக்கு பயணம் செய்வதை தி.மு.க.வினர் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *