சிறுகதை

நாணயம் – ராஜா செல்லமுத்து

சரவணன் ஜெராக்ஸ் சென்டரில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

போட்டோ காப்பி எடுப்பவர்கள், ஜெராக்ஸ் எடுப்பவர்கள் பைண்டிங் பண்ணுபவர்கள். அது மட்டுமல்லாமல் பிரவுசிங் சென்டர் என்று சரவணன் ஜெராக்ஸ் கடையில் நிறைய இருந்தது.

சரவணன் செய்யும் வேலைக்கு கட்டணமாக பெரிதாக எதையும் கணக்கு வைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பாதகம் இல்லாமல் பணம் வாங்குவான்.

அதனால்தானோ என்னவோ சரவணன் ஜெராக்ஸ் கடையில் கூட்டம் கூடி நிற்கும் .

அவனின் அன்பான பேச்சும் அரவணைக்கும் கரமும் வாடிக்கையாளர்களை வசியப்படுத்தும்.

ஒரு முறை அந்தக் கடைக்கு வந்தால் மறு முறை மறு முறை வரவேண்டும் என்று என்ற எண்ணம் தோன்றும் ‘அதனால் தான் எப்போதும் கூட்டம் கூடியிருக்கும் .வீடும் கடையும் ஒன்றாக இருப்பதால் சரவணனுக்கு அந்தக் கடை நடத்துவதில் நிறைய சவுகரியம் இருந்தது.

ஒரு நாள் தயாளன் என்பவர் தன்னுடைய மகனின் பிறப்பு சான்றிதழ், பள்ளி படிப்பு சான்றிதழ் அத்தனையும் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு சரவணன் கையில் ஐம்பது ரூபாயை கொடுத்தார்.

சரவணன் ஏதோ ஒரு சிந்தனையில் பணத்தை வாங்கிக்கொண்டு 100 ரூபாய்க்கான சில்லறையை தயாளன் கையில் கொடுத்தார்.

ஆனால் அதை வாங்கிய தயாளன்

தம்பி நான் உங்ககிட்ட 50 ரூபாய் தான் கொடுத்தேன் .

ஆனா நீங்க எனக்கு நூறு ரூபாய்க்கு சில்லற கொடுத்திருக்கீங்க .

உங்க காசு எனக்கு வேண்டாம் என்று சொன்ன போது சரவணன் அருகில் அமர்ந்திருந்த முத்து அதை கவனித்து,

சபாஷ் ஒரு உண்மையான, நாணயமான மனிதன சந்தித்திருக்கிறேன் என்று சொன்ன போது ,

சார் நான் ஒரு கட வச்சு இருக்கேன் ; என்கிட்டயும் இந்தமாதிரி வாடிக்கையாளர்கள் அதிகமாக கொடுப்பாங்க .

ஆனா அந்தப் பணத்த நான் திரும்ப கொடுத்துடுவேன்.

ஏன்னா அது தப்பு சார். நான் நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு, ஒரு தவறு செய்தா, எனக்கு 200 ரூபா நஷ்டம் ஆகும் . அது பண்ணக்கூடாது.

ஒரு வியாபாரி உடைய நஷ்டம் கஷ்டம் ஒரு வியாபாரிக்கு தான் தெரியும் .

நான் சரவணன் கிட்ட 50 ரூபாய்க்கு பதில் நூறு ரூபா வாங்கிட்டு போனா, எனக்கு 500 ரூபாய் செலவாகும் சார்.

அதனால நான் உண்மையைச் சொன்னேன் என்றபோது முத்துவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது .

சரவணன் 50 ரூபாய்க்கு என்ன பில்லானதாே அந்தப் பணத்தை மீதத்தை வாங்கிக்கொண்டார்.

ஒரு நாணயமான மனிதனை சந்தித்ததாக சரவணனும் முத்துவும் பேசிக்கொண்டார்கள்.

அடுத்தடுத்த வேலைகள் அந்த ஜெராக்ஸ் கடைக்கு வந்து கொண்டிருந்தது.

நாணயம் இருக்கும் இடத்தில் நாணயம் குவியும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.