சிறுகதை

நாட்டு மருந்து – ராஜா செல்லமுத்து

நகரின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் ஒரு பெரிய அலோபதி மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார் இருளப்பன்.

அவர் படித்தது எல்லாம் மருத்துவம். எம்பிபிஎஸ் படித்தவர் . ஆனால் அவர் எழுதும் மருந்திற்கும் போடும் ஊசிக்கும் மட்டுமே படித்து இருக்கிறாரே ஒழிய , மற்றபடி அவர் நடமாடும் ஒரு சித்தமருத்துவர்.

அது அலோபதியின் மீது இருக்கும் அவ நம்பிக்கை அல்ல . நம் தமிழ் மருத்துவத்தின் மீது இருக்கும் நம்பிக்கை.

மருத்துவம் படித்து இருந்தாலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர். இந்த உலகம் எதை கண்டும் பயப்படாது மரணத்தைக் கண்டு மட்டும்தான் பயப்படும். என்று மரணத்தை மனிதன் வெல்கிறானோ ? அன்று இந்த பூமியில் கடவுளுக்கு வேலை இல்லாமல் போகும்.

மனிதனால் இறந்துபோன உயிரைப் பிழைக்க வைக்க முடியாது. அப்படியாெரு மருத்துவம் இங்கு இல்லை.

அப்படி இறந்து போனவர்களை மருத்துவத்தால் பிழைக்க வைக்க முடியும் என்றால் இந்த பூமியில் கடவுளுக்கு வேலை இருக்காது.

வயோதிகம், இறப்பு இந்த இரண்டும் தான் இந்த பூமியை ஏதோ ஒரு சக்தி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு முழு உதாரணம்.

வயோதிகத்தையும் இறப்பையும் மருத்துவத்தால் சரி செய்ய முடியுமானால் கோயில்களும் வழிபாட்டு தலங்களும் மனிதர்களால் உதாசீனப் படுத்தப்படும்.

இந்த இரண்டும் தான் மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது .

இருளப்பன் படித்த படிப்புக்கு அலோபதி ஊசியும் மாத்திரையும் கொடுப்பார். ஆனால் அதை விட கூடுதலாக வேப்ப எண்ணையும் சுக்கும் கொடுத்து அனுப்புவார்.

அவர் மருத்துவமனையில் ஒரு அலோபதி மருத்துவருக்கும் இரு மருந்து மாத்திரைகளை விட ஒரு சித்த வைத்தியம் இருக்கும் மருந்துகளே நிறைய இருக்கும்.

ஒரு மருத்துவராக நோயாளிகளிடம் பேசமாட்டார் . ஒரு சித்த மருத்துவராகத் தான் பேசுவார் .

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது மருத்துவமனையாகத் தான் தெரியும்.

ஆனால் உள்ளே போய் பார்த்தால் அது சித்த வைத்திய இடமாக இருக்கும்.

அவரை நம்பி வரும் நோயாளிகளை அவர் காப்பாற்றாமல் விடுவதில்லை.

அலோபதி, சித்த மருத்துவமும் சேர்ந்து கொடுத்து எப்படியாவது நோயாளியை குணமாகிவிடுவார்.

பேண்ட், சட்டை அணிந்த ஒரு நாட்டு மருத்துவர் அவர் ‘

அவரைப் பார்த்தால் ஒரு மருத்துவருக்கு உண்டான உடையோ, நடையோ பாவனையாே எதுவும் இருக்காது

ஆனால் அவரின் செய்கையால் அத்தனை பேரையும் பிழைக்க வைத்து விடுவார் இருளப்பன்.

நாட்டு மருந்து நயம்படக் கூறுவார் இங்கே நாட்டு மருந்து என்ற சித்த மருத்துவம் பலருக்கு வேண்டா வெறுப்பாக இருக்கிறது.

ஆனால் அலோபதி படித்த இருளப்பன் நாட்டு மருந்தை விட்டுக்கொடுப்பதில்லை..

மருத்துவர்கள் கூடி ஆலோசனை நடத்திய ஒரு மாநாடு நடந்தது.

இருளப்பனை ஒரு மருத்துவர் இகழ்ந்து பேசினார்.

என்ன இருளப்பா நாட்டு மருந்து கடை வச்சிருக்கீங்களா? என்று அவர் கிண்டலாக பேச ,

ஆமா நான் நாட்டுமருந்துக்கடை தான் வச்சிருக்கேன். மனுசன பொழைக்க வைக்கிற எந்த விஷயமா இருந்தாலும் உயர்த்திப் பிடிக்கிற மொழியை நான் எப்போதும் தாழ்த்தி பிடிக்கிறது இல்லை .

காரணம் அலோபதியில் இருக்கக்கூடிய வீரியத்தை விட நாட்டுமருந்து நிறைய சக்தி இருக்கு .

அதனால அலோபதிய ஆதரிக்கிறேன் . நாட்டு மருந்து நான் கை கொடுக்கிறேன்.

இந்த ரெண்டும் மனுசனோட ரெண்டு கண்ணு மாதிரி. ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை. நீங்களும் ஆதரிங்க .நாட்டுமருந்த வழிமொழிங்க.

நிச்சயமா உங்க நோயாளிகள் ஒரு ஆள் கூட தவற மாட்டார்க என்று சொன்னார் இருளப்பன் .

அவர் பேசுவதைக் கேட்ட எல்லா மருத்துவர்களும் அலோபதி படித்த மருத்துவர்களும் கை கொட்டி சிரித்தார்கள்

ஆனால் சபையில் வேண்டுமானால் அவர்கள் சிரிக்கலாம்.

ஆனால் உண்மையில் வெளியில் இருளப்பன் சொல்வதுதான் உண்மை என்பது அவர்களுக்கு தெரியும்.

ஏனென்றால் எல்லா மருந்துகளும் நாட்டு சித்த மருத்துவத்தில் இருந்து பாடம் செய்யப்பட்டுத் தான் அலோபதி மருந்துகளாக வெளிவருகிறது என்பது அந்த மருத்துவர்களுக்கு தெரிந்த உண்மை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *