செய்திகள்

நாட்டு மருத்துவம் செய்வதாக கூறி நூதன முறையில் நகை கொள்ளை

Makkal Kural Official

2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

விழுப்புரம், ஜூலை 26–

மயிலம் அருகே நாட்டு மருத்துவம் செய்வதாக கூறி நூதன முறையில் தங்க நகைகள் கொள்ளை அடித்த 2 பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதனின் மனைவி ராணி (வயது 40). இவர் கடந்த ஜூலை15-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைக்கில் வந்து நாட்டு மருந்து கொடுப்பதாக கூறி நைசாக பேசி உள்ளார். பின்னர் மருந்தை உபயோகிக்கும் போது தங்க நகைகளை அணிய கூடாது என ராணி அணிந்திருந்த கம்மல், மோதிரம் உள்ளிட்ட ஒரு சவரன் நகையை கேட்டு வாங்கி உள்ளார்.

அப்போது ராணி அவரது நகையை கழற்றி கொடுத்துள்ளார். பிறகு ராணியை திசை திருப்பி அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து நகைகளுடன் தப்பி சென்றுள்ளார். நகையை பறிகொடுத்த ராணி இதுகுறித்து மயிலம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதேபோல் மயிலம் அடுத்த ஐவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி அழகம்மாள் (வயது 50) வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத பைக்கில் வந்து நாட்டு வைத்தியம் செய்வதாக கூறி நாட்டு மருந்துகளை கொடுத்து விட்டு பின்னர் மூதாட்டியின் 1 சவரன் நகைகளை கேட்டு வாங்கி கவனத்தை திசை திருப்பி அங்கிருந்து உடனடியாக சென்றுள்ளார்.

4 பேர் கைது

இந்த இரண்டு புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்த மயிலம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், பாதிராப்புலியூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியில் 2 பைக்கில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் பைக்கில் வந்தவர்கள் காட்பாடி அடுத்த திருவளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் வல்லரசு (வயது 22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் செல்வம் (வயது 23) இவரது மனைவி மீனாட்சி (வயது 23); முருகன் மனைவி வள்ளியம்மாள் (வயது 40); என்பது தெரியவந்தது.

இவர்கள் பொம்பூர் மற்றும் ஐவேலி கிராமத்தில் நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி நூதன முறையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடி சென்றதை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து 3 சவரன் நகைகளையும், இரண்டு பைக் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *