செய்திகள்

நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது: எஸ்டிபிஐ கண்டனம்

புதுடெல்லி, செப். 28–

நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் பைஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை செய்ததற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் பைஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்யும் பாஜக அரசின் முடிவு ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மக்களின் உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும். பாஜக ஆட்சியின் தவறான மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் கைது மற்றும் சோதனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். பேச்சு சுதந்திரம், எதிர்ப்புகள் மற்றும் அமைப்பு ஆகியவை, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக, ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கும், எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தாமல் மக்களைப் பயமுறுத்து வதற்கும், விசாரணை அமைப்புகளையும், சட்டங்களையும் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. நாட்டில் பிரகடனப்படுத்தப்படாத அவசரநிலை தெளிவாக காணப்படுகின்றது. மேலும், அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், மக்களும், இந்திய அரசியலமைப்பின் ஜனநாயகம் மற்றும் மதிப்புகளை காப்பாற்ற தங்கள் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *