சென்னை, மார்ச்.18-
நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு தனிநபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை வினியோகிப்பது குறித்து புகார்களை, தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள 1800 425 6669 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி, tn.electioncomplaints2024@incometax.gov.in என்ற இ–மெயில் மூலமோ, ‘வாட்ஸ் அப்’ எண் 94453-94453 மூலமோ புகார் தெரிவிக்கலாம். தகவல்களை பகிர்ந்து கொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித்துறை (புலனாய்வு) இயக்குனர் ஜெனரல் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறி உள்ளார்.