டெல்லி, ஜூலை 1–
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட்11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதானி குழுமம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள் முடங்கியது.
20 ந்தேதி தொடக்கம்
இதனைத் தொடர்ந்து அவை சிறிது நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடந்தது. பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதோடு அவரது எம்.பி. பதவியை பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் பெரும்பாலான நாட்கள் முடங்கிய நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட்11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் நிலவரம், தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலவரும் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.