வாழ்வியல்

நாசா விண்ணில் செலுத்திய 9-வது செயற்கைக்கோளின் பணி என்ன ?

பூமியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் 8 லேண்ட்சேட் செயற்கைக் கோள்கள் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கின்றன. லேண்ட்சேட் (Landsat) செயற்கைக் கோள்கள் வரிசையில் 9 – வது செயற்கைக் கோளான ‘லேண்ட்சேட் 9’ நாசா விண்ணில் செலுத்தியது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செப்.27-ல் இந்திய நேரப்படி இரவு 11.42 மணிக்கு United Launch Alliance-ன் அட்லஸ் 5 விண்கலம் மூலம் லேண்ட்சேட் 9 (Landsat 9) செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

காலநிலை மாற்றங்கள் பூமியில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என அறிந்து கொள்வதற்கும் நாம் பூமியின் மேற்பரப்பில் என்ன விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் பூமியின் மீது ஒரு ‘கண்’ வைக்க வேண்டியது அவசியம். அப்படி பூமியின் மீது நமது கண்ணாக 50 ஆண்டுகளாக பூமியைப் படமெடுத்து வந்திருக்கின்றன லேண்ட்சேட் (Landsat) செயற்கைக் கோள்கள்.

அமெரிக்காவின் நாசா மற்றும் U.S. Geological Survey (USGS) ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தி வரும் திட்டம் இது.

பூமியின் மேற்பரப்பைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று 1972-ல் ஜூலை 23-ல் Earth Resource Technology Satellite-1 என்ற செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் அதுவே லேண்ட்சேர் 1 எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பூமியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் 8 லேண்ட்சேட் செயற்கைக் கோள்கள் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *