செய்திகள்

நாங்கள் நலமா இல்லை ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை, மார்ச் 06–

திமுக ஆட்சியில் நாங்கள் நலமாக இல்லை என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாடு அரசால் இதுவரை ‘மக்களை தேடி மருத்துவம்’, ‘இல்லம் தேடி கல்வி, ‘உங்கள் ஊரில் கலெக்டர்’, புதுமைப்பெண் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பல திட்டங்கள் தொங்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் பலன்கள் பயனாளர்களை சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில், “நீங்கள் நலமா?” என்ற புதிய திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

எடப்பாடி விமர்சனம்

அதனை விமர்சிக்கும் விதமாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:–

“நீங்கள் நலமா” என்று கேட்கும் ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடிய ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!’ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள படத்தில், ‘பணி நிரந்தரம் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, முதியோர் ஓய்வூதியம் இல்லை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, ‘நீட்’ ரத்து இல்லை, தாலிக்கு தங்கம் இல்லை மற்றும் மடிக்கணினி இல்லை’ என்ற வாசகங்களுடன், #நாங்கள் நலமாக இல்லை – ஸ்டாலின் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் நலமா? என முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *