தயாளன் தன் நண்பர்கள் உடன் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் டீ கேட்டார். அவர் வாங்கி கொடுக்க மறுப்பதில்லை .
எப்படியும் அவர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தால் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
அத்தனை பேருக்கும் டீ வாங்கி கொடுப்பார்.
அன்று அவரைப் புடைசூழ சுற்றி நண்பர்கள் இருந்தார்கள்.
அப்போது கடைக்குள் ஒரு பெண்மணி வேகமாக உள்ளே நுழைந்து தயாளன் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அவர் நண்பரிடம் யாசகம் கேட்டாள்.
தயாளனுக்கும் எனக்கும் கோபம் வந்தது.
என்ன இது? யாசகம் கேட்க அவங்க இப்படியா ? ஒரு மேனரிசம் வேண்டாமா? என்று யாசகம் கேட்க வந்த அம்மாவை திட்டினார் .
அவள் பதில் ஏதும் சொல்லாமல் வெளியேறினாள்.
அவங்களுக்கு கைகள் இல்லையா? அவங்க நல்லா தான் இருக்காங்க. அவங்க ஏன் மத்தவங்கள கேக்கணும் என்று திட்டிக் கொண்டிருந்தார் தயாளன்.
அதை மற்றவர்களும் ஆமோதித்து அவர் சொல்வதற்கு தலையாட்டி கொண்டிருந்தார்கள்.
இந்தம்மா நல்லாதான் இருக்கு. உழச்சி சாப்பிட வேண்டியதுதானே? ஏன் மத்தவங்ககிட்ட எல்லாம் பணம் கேட்கணும் ?என்று அங்கு நின்றிருந்தவர்களும் ஆதரவாகப் பேசினார்கள்.
யாசகம் கேட்டு வந்த தாய் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
இப்படி இரண்டு மூன்று தடவை நாம பண்ணனும்னா போயிருவாங்க. இவங்கள மாதிரி ஆளுககிட்ட தான் அதிகமான பணம் இருக்கும் .லட்சக்கணக்கான வச்சிருக்காங்க என்று தயாளன் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த பெண் எதுவும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார் .
தயாளன் நண்பர்களெல்லாம் காப்பி குடித்து விட்டு வெளியே வந்தபோது,
வந்த நண்பர்களில் ஒருவர் தயாளனிடம் தலையைச் சொரிந்தார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை;
என்ன என்று கேட்டார் தயாளன்.
வாய் திறந்து பதில் பேசாமல் ஒரு அசட்டு சிரிப்பு மட்டுமே சிரித்தார்.
என்ன சொல்லுங்க என்று கேட்டபோது
கொஞ்சம் செலவுக்கு பணம் இல்லை என்று அந்த நபர் சொன்னபோது சிரித்துக்கொண்டே கொஞ்சம் பணத்தை எடுத்து அந்த நண்பரிடம் கொடுத்தார் தயாளன்.
அவரும் ஒரு பொய்யான சிரிப்பை வரவழைத்து பணத்தை வாங்கிக்கொண்டு போனார்.
அலுவலகத்திற்குள் நுழையும்போது டீக்கடையில் யாசகம் கேட்ட அதே பெண் தயாளனைக் கடந்து சென்றார்.
அப்போது அவருக்கு மனதில் சுர் என்று அடித்தது.
யாருன்னே தெரியாத அம்மா யாசகம் கேட்கும் போது நம்ம துரத்திவிட்டாேம்.
ஆனா தெரிஞ்சவங்க நம்மகிட்ட வந்து யாசகம் கேட்கிறார் .இதை எந்த வகையில் சேர்கிறது? என்று நினைத்த தயாளன்,
அந்த அம்மாவைக் கூப்பிட்டு கையில் 10 ரூபாய் கொடுத்தார்.
அந்தப் பெண் வேண்டாம் என்று சொன்னார்.
இல்ல பிடிங்க என்று சொல்லி பணத்தை கொடுத்தார்.
தயாளன் சிரித்துக்கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தார்