செய்திகள்

நவ. 30 : தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு

சென்னை, நவ. 30–

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தீபாவளி பண்டியையை தொடர்ந்து உயர்ந்த நிலையில், சென்ற வாரத்தில் சற்று குறைந்தது. இன்று கிராமுக்கு மேலும் 16 ரூபாய் குறைந்து ரூ.4515 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 128 குறைந்து ரூபாய் 36120 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4879 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39032 எனவும் விற்பனையாகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ரூ.1.30 காசுகள் குறைந்து, ரூபாய் 66.50 எனவும், ஒரு கிலோ விலை ரூ. 66,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *