செய்திகள்

நவ. 13- ரூ.37 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.264 உயர்வு

சென்னை, நவ. 13–

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,240-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த 3 மாதங்களாக, ரூ.35 ஆயிரம் விலையிலேயே சற்று உயர்வதும் தாழ்வதுமாக இருந்து வந்தது. தீபாவளிக்கு முன்பு ரூ.36 ஆயிரம் என்ற விலையில் இருந்த தங்கத்தின் விலை, மளமளவென கூடி, இன்று ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆகிறது.

சவரனுக்கு ரூ.264 உயர்வு

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.36,976 ஆகவும் கிராம் ரூ.4622 ஆகவும் இருந்த நிலையில், இன்று கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து, ரூ.4,655-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.37,240-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 71,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ரூ.71,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *