செய்திகள்

நவ. 05-தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 424 உயர்வு

சென்னை, நவ. 5–

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.424 அதிகரித்து ரூ.36,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாள்தோறும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை தீபாவளி முடிந்ததும் கிடுகிடுவென உயர்ந்து வருவது நகை பிரியர்களை வருத்தமடைய செய்திருக்கிறது.

ரூ.424 உயர்வு

இன்று காலை நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்திருத்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 அதிகரித்து சவரன் ரூ.36,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,500 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.68.60 க்கும் ஒரு கிலோ ரூ.68,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *