செய்திகள்

நவீன தொழில்நுட்பம் செம ஸ்டைல் ; பாதுகாப்பு அம்சங்களுடன் ‘யாரிஸ்’ கார்: டொயோடா நிறுவனம் அறிமுகம்

மதுரை, ஜூலை.28–-

நவீன தொழில்நுட்பம் செம ஸ்டைல் ; பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘யாரிஸ்’ கார்களை டொயோடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தற்போதைய நவீன யுகத்தில் நம்மைச் சுற்றி பல்வேறு மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நவீன தொழில்நுட்பம் ஸ்டைல், சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு வாகன உற்பத்தியாளர்களை வாடிக்கையாளர்கள் தூண்டி உள்ளனர். இந்த நிலையில் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக நவீன ஸ்டைல், தொழில்நுட்பம், சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்திய சாலைகளில் வலம் வர களமிறங்கி உள்ளது டொயோடா யாரிஸ்.

புதிதாக வெளிவந்துள்ள யாரிஸ் கார் தனித்துவமான அம்சங்களுடன் அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு வசதிகளை டொயோடா நிறுவனம் அளிக்கும் என்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் இந்த யாரிஸ் காரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய யாரிஸ் கார் குறித்து டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவை பிரிவின் மூத்த துணைத் தலைவர் நவீன் சோனி கூறுகையில் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் டொயோடா யாரிஸ் டிரைவிங் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதில் டூயல் விவிடி-ஐ, 1.5 பிஎஸ்-6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த காரை ஓட்டுபவர்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும். சி-பிரிவு வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த காரில் இருந்து வெளிவரும் சத்தம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆடியோ மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை 7.0 எல்இடி தொடுதிரை வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள சைகை கட்டுப்பாடு மூலம் யூஎஸ்பி, ஆக்ஸ்-இன் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் ப்ளூடூத், ரிமோட் கண்ட்ரோல், எஸ்டி கார்டு, மிரர் லிங்க் (வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்), மிராகாஸ்ட் டிஎம், எச்டிஎம்ஐ மற்றும் வை-பை போன்ற வசதிகளையும் யாரிஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக யாரிஸ் காரில் 7 எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள் உள்ளது. அதாவது டிரைவர், பயணி, இடது மற்றும் வலதுபுறம், கர்டைன் ஷீல்டு, முழங்கால் பகுதியில் இந்த ஏர்பேக்குகள் உள்ளது. இந்த வசதி யாரிசின் அனைத்து வகையான மாடல்களிலும் கிடைக்கிறது.

மேலும் சிறப்பு அம்சங்களான ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், டயரில் உள்ள காற்றை கண்காணிக்கும் சிஸ்டம், குழந்தைகளுக்கான இருக்கை வசதிகள் ஆகியவற்றை யாரிஸ் கொண்டுள்ளது.

மேலும் யாரிஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு 55 சதவீதம் கேஷ் பேக் சலுகையை பெறலாம். இந்த சலுகையானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்மே வழங்கப்படும் என்று மூத்த துணைத் தலைவர் நவீன் சோனி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *