நல்லெண்ணெய் புற்றுநோய் செல்களை அழிக்கும். நல்லெண்ணெயில் பைரேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் இருப்பதால் இதனை உணவில் சேர்க்கும் போது உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய காரணிகளை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கும்.
மேலும் நல்லெண்ணெயை கொண்டு வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வர உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேற்றப்படும்.
மேலும் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடி வளர்ச்சி அதிகரிக்கும். பொடுகுத் தொல்லை நீங்கும். சருமம் பளபளப்பாகும். முடி உதிர்வு தடுக்கப்படும். உடல் புத்துணர்ச்சி பெறும்.கண்கள் ஆரோக்கியம் மேம்படும்.
அன்றாட உணவில் நல்லெண்ணெய் இருக்குமாறு பார்த்துக் கொள்வதன் மூலம் நோய்கள் வராமல் மட்டுமில்லாமல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.