சிறுகதை

நல்லவர் – ராஜா செல்லமுத்து

கோவிந்த் அலுவலகத்தில் மே தினம் கொண்டாட ஏற்பாடானது .100 பேருக்கு மேல் பணிபுரியும் அவருடைய நிறுவனத்தில் அத்தனை பேருக்கும் பிரியாணி சாப்பாடு செய்து கொடுத்தார்.

அவருக்குத் தெரிந்த நண்பர்கள் தொழில் முனைவோர் அத்தனைபேரையும் விழாவிற்கு அழைத்திருந்தார்.

பணிபுரியும் ஆட்கள், விருந்தினர்கள் என்ற பாகுபாடில்லாமல் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான உணவு பரிமாறப்பட்டது. எந்தவித பாகுபாடுமின்றி தொழிலாளர்களை பாவித்து வந்தார் .

அதனால் அவரின் நிறுவனம் ஓகாே என்று இருந்தது.

கோவிந்த்துக்கு வயது குறைவுதான் .ஆனால் கூடுதல் லட்சியங்கள், கூடுதல் சிறப்பு சிந்தனைகள்.

சாப்பிட்டு முடித்த ஊழியர்கள் விருந்தினர்கள் அத்தனை பேரும் நிறுவனத்தின் மேல் தளத்தில் இருக்கும் பரந்த இடத்திற்கு அழைக்கப்பட்டார்கள்.

ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள், ஒரு பக்கம் என்று அமர்ந்திருந்தார்கள். சிறப்பு விருந்தினர்களைப் பேச அழைத்தார் கோவிந்த் .

மே தினம் பற்றியும் ஊழியர்கள் பற்றியும் வந்திருந்த அத்தனை பேரும் பேசி இருந்தார்கள். நிறுவன ஊழியர்களின் நிறைகுறைகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கோவிந்த் அறிவுறுத்தினார்.

அங்கு வேலை செய்யும் சில ஊழியர்கள் வந்து தங்கள் எண்ணங்களையும் குறைகளையும் பகிர்ந்துகொண்டார்கள் .

ஒரு பெண்மணி நான் மேடையில் பேசியது இல்லை என்று வெட்கப்பட்டு தள்ளி நின்றாள்.

அவரை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி மேடையில் பேசுவதற்கு தைரியம் மட்டும் போதுமானது . நீங்கள் பேசுங்கள் என்று சொல்ல அந்தப் பெண்மணி நாணிக் கோணி தன் பேச்சை ஆரம்பித்தாள்.

நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் கடமைகள் என்று அத்தனைபேரையும் ஊக்கப்படுத்தி பேசினாள் அந்தப் பெண்மணி.

இங்க பாரு பேசத் தெரியாது சொல்லிட்டு எப்படி பேசுறாங்க. அதுதான் எப்போது? ஆரம்பம் பயமாத்தான் இருக்கும் போகப் போக சரியாப் போயிடும். இதுதான் பேச்சுப் பயிற்சி என்று அந்த பெண்மணிக்கு ஆதரவாக பேசினார்கள் அந்த ஊழியர்கள்.

கடைசியாக நிறுவன முதலாளி கோவிந்த் பேச ஆரம்பித்தார்.

நிறுவனத்தில் இருந்த சில நபர்களை சுட்டிக்காட்டி நிறை குறைகளைச் சொன்னார்.

கடைசியில் ஜெகன் என்ற ஒருவரை அழைத்தார். அவர் பார்ப்பதற்கு சராசரி மனிதர்கள் இருந்து சற்று தள்ளி இருந்தார்.

அவரை இறுகப் பிடித்த கோவிந்த் இந்த நிறுவனத்தில் வேலை செய்கிற அத்தனை ஊழியர்களையும் ஜெகன் எனக்கு ரொம்ப பிடிக்கும் . காரணம் நான் நிறுவனத்தை விட்டு வெளியில போயி அலுவலகம் வரும் வரைக்குமே அது இரவு 12 மணி ஆனாலும் அவர் இங்கதான் இருப்பார். நான் போகச் சொன்னா கூட போக மாட்டார் .இந்த நிறுவனத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் ஏதோ ஒன்னப் பத்தி குறை பேசுவீங்க . புறம் பேசுவீங்க .ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டு இருக்கீங்க. ஜெகன் மட்டும் நடக்காது .

காரணம் அவர் வாய் பேச மாட்டார். அவருக்கு காது கேட்காது . பார்வை கூட அவ்வளவு சரியாக இல்லை. அந்த மனுஷன் இங்கே வேலை செய்றத யாருமே தடுக்க முடியாது. ஒரு வேளை இவரும் நம்மள மாதிரி சராசரி மனுசனா இருந்தா கெட்டுப் போய் இருக்கலாம் என்று அவர் சொன்னபோது கோவிந்தன் கண்கள் பனித்து இருந்தன .

ஜெகன் நம்மை தான் சொல்கிறார் என்ற எண்ணம் இல்லாமல் அவர் ஒரு திசையில் திரும்பிக் கொண்டு சிரித்தபடி இருந்தார் .

அங்கு கூடியிருந்த விருந்தினர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு மாதிரியாகப் போனது .

இதனைப் பற்றி அவ்வளவு சிறப்பாகவும் அவரைப் பற்றிய ஆன எண்ணங்களையும் சொன்னார் கோவிந்த்.

உடனே வந்திருந்த விருந்தினர் ஒருவர் எழுந்து

இந்த ஜெகன் நான் 12 மணிக்கு இங்க வந்தாலும் அதிகாலை வரை பேசிட்டு வெளியே போனாலும் எனக்கு காபி கொடுத்து உபசரித்து இருக்கிறார் .இவருக்கு சிறு அன்பளிப்பு கொடுக்கப் போறேன் என்று மேடைகளில் ஏறி கொஞ்சம் பணத்தை காெடுத்தார் . கையில் அதை வாங்கிக்கொண்டுஜெகன் என்னமோ போல் சிரித்தார்.

அங்கே கூடியிருந்த ஊழியர்களின் ஒரு பெண்மணி வந்து கையெடுத்து அனைவரையும் கும்பிடச்சொன்னாள் கையெடுத்து கும்பிட கூட ஜெகனுக்குத் தெரியவில்லை .

பரவாயில்ல இருக்கட்டும் என்று ஊழியர்களும் இருந்தவர்களும் சொல்ல,

ஜெகன் ஒரு ஓரத்தில் உட்கார வைக்கப்பட்டார் .விழா முடிந்தது. சிலர் விழாவை பற்றி விமர்சித்தார்கள். சிலர் பெருமை பேசினார்கள். சிலர் குறை சொன்னார்கள். ஆனால் எதுவும் பேசாமல் ஏதோ ஒரு பக்கம் திரும்பி சிரித்துக்கொண்டே படிகளில் இறங்கினார் ஜெகன் .

அதில் வந்திருந்த ஒரு விருந்தினர் ஜெகன் உண்மையில் நல்லவர்தான் . கோவிந்த் சொன்னது உண்மைதான் என்று அவர் நினைத்துக்கொண்டார்.

ஜெகன் சிரித்தபடியே படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.