நல்வாழ்வு
கருப்பட்டி இனிப்பு சுவைக்காக சாக்கலேட், கருப்படி மிட்டாய், கடலை மிட்டாய் போன்ற தென் இந்தியா உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
கருப்பட்டி வெள்ளை சர்க்கரை அல்லது கரும்பு சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப் படுகிறது.
வெள்ளை சர்க்கரை அல்லது கரும்புச் சர்க்கரையை விட கருப்பட்டி அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணம் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இது பி வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். மேலும் இதில் அஸ்கார்பிக் அமிலமும் உள்ளது.
இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சோகைக்கு நல்லது.
மேலும் கருப்பட்டியில் உள்ள மெக்னீசியம் நரம்பு மண்டலங்களின் சரியான செயல் பாட்டிற்கு இன்றியமையதது.
மேலும் பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துகிறது. வாத நோய் மற்றும் பித்த கோளாறுகளை தடுக்கிறது.
இருமல் மற்றும் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு பயன்படும் மருந்து பொருட்களிலும் பயன்படுகிறது.பொதுவாக கருப்பட்டி அளவோடு தேவையான அளவு பயன்படுத்துவது பாதுகாப்பானது தான்.
ஆனாலும் அரிதாக வெகு சிலருக்கு கருப்பட்டி ஒவ்வாமை இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இருந்தால் மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைத்தல், சொறி, தலைவலி, சோர்வு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இத்தகைய கோளாறுகளை உணர்பவர்கள் கருப்பட்டியை தவிர்ப்பது நல்லது.