வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும். திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும். வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் இளைக்கதாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.