சிறுகதை

நம்ம வீட்டு உணவு | ராஜா செல்லமுத்து

தொழில் தொடங்குவதற்கான புதிய முயற்சியில் இருந்த பன்னீர், தன் நண்பர்களுடன் ரவி வீட்டில் உறவாடிக் கொண்டிருந்தான்.

” பன்னீர் நீங்க ஆரம்பிச்சிருக்கிற தொழில் ரொம்ப நல்லாயிருக்கு என்ன கொஞ்சம் சிறமம் இருக்கும் போல” என்று சொன்ன ரவியை ஒரு மாதிரியாகப் பார்த்தான்,

‘‘பன்னீர் என்ன அப்படி பாக்குற’’

“இலலையே”

“ஆமா நீ ஒரு மாதிரியா பாத்தது, எனக்கு தெரியாதுன்னு நெனைக்கிறயா? ஒன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரியாதுன்னு நெனைக்கிற போல…’’

பன்னீர் வீட்டுல புழுக்கமா இருக்குல்ல இங்க பக்கத்தில ஒரு பார்க் இருக்கு அங்க போயி பேசலாமா?

“சரி ரவி”

அப்படியே நம்ம ஜெயசீலனும் வருவான் அவனோட கருத்தையும் கேப்பமே”

“ஓ.கே ரவி போகலாம்” என்ற இருவரும் அருகிலிருந்த பூங்காவுக்குள் நுழைந்தனர்.

“பன்னீர்”

“ம்”

டீ குடிச்சிட்டு போகலாமா?

“வேணாம் ரவி”

“ஏன்… சும்மா டீய, டீய குடிச்சு என்ன பண்ணப்போறோம்.

பேசாம ஆரஞ்சு ஜூஸ் குடிப்பமா?

“ஓ தாராளமா”

“டீயில என்ன இருக்கு. பத்து லிட்டர் பால்ல அம்பது லிட்டர் தண்ணிய ஊத்துறானுக. பாக்க வெள்ளையா இருக்கணும். அவ்வளவு தான். மத்தபடி எல்லாம் சுடு தண்ணி தான். காசு குடுத்து கேடு வாங்குறத விட பேசாம ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறது ரொம்ப நல்லது.

“ஆமா… பன்னீர் நீ சொல்றது நெசம் .வா ஆரஞ்சு ஜூஸ்குடிக்கலாம்” என்ற படியே பார்க்கின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஜூஸ் கடைகளையும் பார்த்தனர்.

இதுல எந்த கடையில குடிக்கலாம்”

“நம்ம பைக்கு எங்கன நின்னுருக்கோ அங்கன குடிக்கலாம் “ஏன்னா, நாம ஆரஞ்சு குடிச்ச மாதிரி இருக்கும் அவங்க நம்ம வண்டிகள பாத்ததும் மாதிரி இருக்கும்ல.

“ஆமா நல்ல ஐடியா” என்ற இருவரும் ஒரு ஜூஸ் கடையை நெருங்கினர்.

“எத்தனைங்க ’’

ரெண்டு

இல்ல மூணு”

“ஏன்?

“ஜெயசீலனுக்கும் சேத்து”

“ஆமால்ல… மூணு குடுங்க’’ என்ற படியே இரண்டு பேரும் உட்கார்ந்தனர்.

இன்னொரு ஜூஸ் கடைக்காரரை பார்த்த போது,

அடப்பாவிகளா, இங்க வந்து குடிக்க மாட்டீங்களா? என்பது போலவே இருந்தது. அவர்களின் பார்வை உரித்த ஆரஞ்சுப் பழங்களை உருளையில் போட்டுப் பிழிந்தாள் ஜூஸ் பெண். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டிருந்த போது ஜெயசீலனும் வந்து சேர்ந்தான்.

வாப்பா வாப்பா, ஒனக்கும் சேத்து தான் ஜூஸ் சொல்லியிருக்கோம்.

‘‘எனக்கு ஐஸ் வேணாம் ’’

‘‘எங்களுக்கும் வேணாம்னே சொல்லிட்டோம்’’.

“அது தான் சரி . ஐஸ் எப்படி வருதுன்னு தெரியுமா?

“தெரியுமே”

“ஆமாப்பா, அது எப்படி வருதுன்னு தெரிஞ்சா ஒரு பய ஐஸ் சாப்பிட மாட்டான் என்ற மூவரும் ஜூஸ்க்காக காத்திருந்தனர்.

உருளையில் போட்ட ஆரஞ்சு போதவில்லையென மீண்டும், சில பல ஆரஞ்சுகளை உரித்துக் கொண்டிருந்தாள் அந்தப்பெண். மூணு ஜூஸ்குடிக்க எவ்வளவு ஆரஞ்சு போட வேண்டியிருக்குன்னு பாரு.

பாவம்ங்க ….. இவ்வளவு ஆரஞ்சு போட்டா கட்டுபடியாகுமா என்ன?

“என்னமோ அவங்க ஏவாரம் அப்பிடி என்று பேசும் போது மூவரின் கையிலும் ஆரஞ்சு ஜூஸ் இருந்தது.

உர்உர் என உறிஞ்சிய ஜூஸை லாவகமாகக் குடித்துவிட்டு மூவரும் பார்க்கினுள் நுழைந்தனர்.

பன்னீர்… தன் தொழிலைப் பற்றிச் சொன்னார். அதற்கு இரண்டு பேரும் சில பல கருத்துக்களைச் சொல்ல

பன்னீர் “ஆமா” என்றார்

“பன்னீர்..’’

“சொல்லுங்க ரவி’’,

“கையில ஒரு பை வச்சிருந்தீங்களே’’

“ஆமா அது வீட்டுல இருக்கு .அதுல காலையில சாப்பிட்ட சப்பாத்தி குருமா இருக்கு, அவ்வளவு தான்.

“அப்படியா ?

“ஆமா. எதுக்கு அத கையில தூக்கிக்கிட்டுன்னு வீட்டுலயே வச்சிட்டு வந்திட்டேன். அது அப்படியே பத்திரமா இருக்கும் என்ற மூவரும் தங்கள் பேச்சை மீண்டும் ஆரம்பித்தனர்.

தொழில்ப் பேச்சு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது உச்சிப் பொழுதை எப்படியது வானம். கிழக்குச் சூரியன் கொஞ்சங் கொஞ்சமாய் மேற்கே நகர்ந்தது.

ரவி சாப்பிட போகலாமா?

“ஓ, போகலாமே ”

“என்ன சாப்பிடலாம்”

“ஏதாவது”

“அப்படின்னா,

எனக்கு சாப்பாடு வேணாம்”

“ஏன்? ”

“வீட்டுல இருக்கே” ஏன் வெட்டியா வேஸ்ட்டா செலவு செய்யணும்”

“இல்ல வாங்க. வீட்டுல இருக்கிறது இருக்கட்டும். நாம ஓட்டல்ல சாப்பிடுவோம் என்று மூவரும் கிளம்பினர்

பிள்ளைங்க எப்ப வருவாங்க மூணு பத்துக்கு” நாம சாப்பிட்டுட்டு வர சரியா இருக்கும் “சரி சாப்பிட்டுட்டு வருவோம் என்ற மூவரும் ஹோட்டல் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தனர்.

பூட்டியிருந்த வீடு திறந்திருந்தது, மூத்த பொண்ணு வந்திருப்பா போல. ஆமா அப்பிடித்தான் என்ற ரவி வீட்டிற்குள் நுழைந்தான்.

ஏய், இது யாருதுன்னு சாப்பிட்டு இருக்க?’’

என்ற தன் மகளைக் கேட்க , இதுல இருந்த சப்பாத்திய என்றாள் யுவந்திகா”

“இது யாருதுன்னு தெரியுமா?

“தெரியலையே” நம்ம வீட்டுல இருந்துச்சு ;அதான் வந்து பாத்தேன்; சாப்பிட்டுட்டேன் என்றாள் வெள்ளந்தியாய் அதற்குள் பன்னீர், ஜெயசீலன் இருவரும் வர அவளுக்கு என்னவோ போலானது.

சாப்பிட்ட சப்பாத்தியை அப்படியே வைத்துவிட்டு எழுந்து வீட்டினுள் ஓடினாள்.

ஏய்…. யுவந்திகா மிச்ச சப்பாத்திய சாப்பிடு’’ என்று ரவி சொல்ல உள்ளே போன யுவந்திகா வெளியே வரவே இல்லை.

யுவந்திகா

சப்பாத்திய சாப்பிடு மிச்சத்த சாப்பிடு என்று எல்லோரும் சொல்ல எனக்கு வேணாம்; வேணாவே வேணாம் என்று அடம்பிடித்தது அந்தக் குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை எதுவும் தெரியாத வரைக்கும் தான் சொர்க்கம். தெரிஞ்சுருச்சுன்னா நரகம் நம்ம வீட்டுல இருந்த சப்பாத்தி நம்மளுதுன்னு தான் அந்தக் கொழந்த நெனச்சிட்டு இருந்துச்சு .ஆனா அது நம்மளது இல்லன்னு தெரிஞ்சதும் அதுக்கு என்னமோ மாதிரி ஆகிப்போச்சு போல. நம்ம வாழ்க்கை கூட அப்பிடித்தான் என்று மூவரும் நொந்து கொண்டார்கள்.

எவ்வளவு சொல்லியும் யுவந்திகா கேட்கவே இல்லை. சப்பாத்தியையும் அவள் சாப்பிட வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *