செய்திகள் நாடும் நடப்பும்

நம்பிக்கை தரும் துவக்கம்

Makkal Kural Official

தலையங்கம்


அமெரிக்கா-ரஷ்யா இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்றன. இந்த சந்திப்பின் பின்னர், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உற்சாகமாகக் கருத்து தெரிவித்து, “உலக அமைதிக்கான வழி அமைந்து வருகிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உக்ரைனுக்குச் கொடுக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது பற்றி எதையும் வெளியிடாமல், எந்த கட்டுப்பாடும்மின்றி செலவிடப்படுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். “நீங்கள் மூன்று வருடங்களாக அங்கே இருந்திருக்கிறீர்கள், அதை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்… நீங்கள் அதை ஒருபோதும் தொடங்கியிருக்கக்கூடாது. என்று டிரம்ப் உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்தார்.

தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாகவும் ரஷ்யாவின் தரப்பில் அறிவிக்கப்பட்டும் உள்ளது.

முன்னதாக, “உக்ரைன் பங்கு பெறாமல் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார் அல்லவா? அதற்கு பதில தருவது போல் தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் புதின் கூறியுள்ளார்”.

இது உலகளாவிய அமைதியை விரும்பும் ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையை தருகிறது.

போர் நிறுத்தம் ஏற்பட்டால் அப்பாவி உயிர்கள் சேதம் தடுக்கப்படும் என்பதையும் டிரம்ப் விவரித்தார்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் கூறினார்.

அவை, முதலாவதாக இரு நாடுகளும் விரைவில் ஒருவருக்கொருவர் தூதர்களை நியமிக்கும். தூதரகங்களுக்கான வங்கி பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ தந்திர பணிகளுக்கான தடங்கல்கள் நீக்கப்படும்.

இரண்டாவதாக, யுக்ரேனுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தேவையான செயல்முறைகள் தொடங்கப்படும்; இதற்காக அமெரிக்கா அதன் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்; அதன் பிறகே ரஷ்யா அதன் பிரதிநிதிகளை நியமிக்கும் என்றும் செர்கே லாவ்ரோவ் கூறினார்.

மூன்றாவதாக பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே முழு ஒத்துழைப்பைத் தொடங்கவும் மேம்படுத்தவும் தேவையான சூழல் உருவாக்கப்படும்.

ரியாத் பேச்சுவார்த்தைகள் பிற உலகளாவிய தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் எதிர்கால பேச்சுவார்த்தைகளை நடத்த முன்மொழிந்தார், துருக்கியை ஒரு மத்தியஸ்த்தம் செய்ய உபயோகித்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

மறுபுறம், ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ, “உக்ரைன் மோதல் தொடர வேண்டும் என்று விரும்புவோருக்கு இப்படிப்பட்ட அமைதி முயற்சிகளில் ஆர்வம் இருக்காது. ஆகவே டிரம்பைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அழைக்கவில்லை என்று கூறியுள்ளனர். “

அமெரிக்க-ரஷ்யா மீண்டும் இணைந்த கைகளாக செயல்பட துவங்கி இருக்கும் இந்நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கது, மேலும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர வழிவகுக்கிறது. விரைவில் தீர்வு பிறக்கும் என்ற நம்பிக்கையின் ஒரு பிரகாசத்தை தருகிறது,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *