சினிமா செய்திகள்

நம்பிக்கைக்கு விஷ்கர் பொறுமைக்கு சுந்தர் பாலா: இளைஞர் பட்டாளத்தின் “இத்தரணியில் பொன்னி”!

பள்ளி நாட்கள் உண்மைச் சம்பவத்தில் குறும்படம்

சென்னை, செப். 9–

‘‘இத்தரணியில் பொன்னி’’: கருணா சாய் பிக்சர்ஸின் தயாரிப்பு. விஷ்கர் (கதை திரைக்கதை வசனம் இவரே) இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் கலைஞர்கள் அறிமுக விழா ஆழ்வார் திருநகர் ஏவிகே பிரிவியூ தியேட்டரில் நடந்தது.

வினோத் சுகுமாரன், சாய் கிருபா, பீனிக்ஸ் மாறன், சுந்தர் பாலா, பொன்னி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ராஜ்குமார், இசை உமர் எழிலன் ஷாஜகான், பாடல்கள் செந்தமிழ், ஒப்பனை சுகந்தி, அகிலன், அம்புலி அணில் குமார் உள்ளிட்ட திரைமறைவு கலைஞர்களுடன் வலது கால் எடுத்து வைத்திருக்கிறார் விஷ்கர்.

தன் பள்ளி நாட்களில் நடந்த சம்பவத்தின் பின்னணியில் திரைக்கதை அமைத்து காதல் சித்திரம் ஆக்க வருகிறார்.

வெள்ளித் திரையில் வருவதற்கு முன் இதே கதையை குறும்படம் ஆக்கி அதை தங்களது விசிட்டிங் கார்டாக பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கும் இளைஞர் பட்டாளம் இது.

ஷ்ரதா (நம்பிக்கை), ஷபூரி (பொறுமை) இரண்டும் ஷீரடி பாபாவின் உபதேச மொழிகள். நிறுவனத்துக்கு கருணா சாயி பிக்சர்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘‘15 ஆண்டு கனவுகள்… ஜெயித்துக்காட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்க விரும்பவில்லை. நிதானித்து பொறுமையாக வர இருக்கிறோம். நின்று காட்டுவோம், வென்று காட்டுவோம்’’ என்று அனுபவம் பேசிய விஷ்கரின் வார்த்தைகளை வழி மொழிந்தார் சுந்தர் பாலா.

டைரக்டர் பாரதிராஜாவின் துணை இயக்குனர் டாக்டர் போஜன் குமரேசன், அன்னாள் காமெடியன் சிவராமனின் மகனும், குறுகிய காலத்தில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் – குறும்படங்கள் இயக்கத்தில் தனி ஆர்வம் காட்டி வருபவருமான நடிகர் ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலரும் விஷ்கர் – சுந்தர் பாலா கூட்டணிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.