செய்திகள் நாடும் நடப்பும்

நமது வல்லரசு சாதனைக்கு உறுதி தரும் பிரம்மோஸ்


ஆர். முத்துக்குமார்


கடந்த வாரம் வியட்நாம் ஆயுதப்படை தலைவர் மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைக்களுக்கு விலை பேசி இருக்கிறார்கள்.

உக்ரைனில் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் நாட்டோ அணி நாடுகளின் ஆயுதங்களால் எந்தப் பெரிய சேதத்தையும் ஏற்படுத்த முடியாது தவிக்கிறார்கள். ஆனால் எதிரியின் தாக்குதலை நிறுத்துவதுடன் எதிர் தாக்குதல் உக்கிரகமாக இருப்பதும் அவசியமாகுகிறது. அதில் ரஷ்ய படை சிறப்பாகவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

ரஷ்யாவின் ஆயுதங்கள் குறிப்பாக பீரங்கிகள், ஆகாய தாக்குதல் போன்ற கனரக ஆயுதங்கள் மிக வலிமையானதாக இருப்பதை உலகமே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

ரஷ்யாவின் கூட்டுடன் நம் நாட்டில் பீரங்கிகள், அதிவேக பிரம்மோஸ் முதலிய ராணுவ தளவாடங்களை நாமே நம் நாட்டில் தயாரித்து வருவதை அறிவோம்.

சென்னை அருகே இருக்கும் பகுதியான ஆவடி அதாவது Anadi என்பது உண்மையில் Armoured Vechicles and Ammanition Depot of India, அதைத் தான் Avadi என சுருக்கி ஆவடி என்ற நகர்புறமே உருவாகி விட்டது.

அங்கு தான் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் நவீன கனரக போர் கருவிகள், குறிப்பாக பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 1965 முதல் இங்கு பீரங்கிகள் தயாரிப்பும், அதை சோதிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அதுபோன்றே ஒலியை விட 5 மடங்கு அதிவேகமாக பயணிக்கும் திறனுடன் குறி தவறாது தாக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டும் வருகிறது. அதன் பின்னணியில் ரஷ்யாவின் மிக நவீன தொழில்நுட்பம் நமக்கு தரப்பட்டு நம்மையும் அதை தயாரித்துக் கொள்ள ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் தற்போது நிலம், ஆகாயம், கடலில் கப்பலில் இருந்து ஏவ முடியும் என்று சோதனை நம் நாட்டில் செய்யப்பட்டு வெற்றியும் கண்டு விட்டது.

மேலும் இந்த ஏவுகணைகள் 2001 முதலே நம் நாட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெற்றிக்கும் பிறகு அதன் இலக்கைத் தாக்கும் வல்லமை வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2017ல் பிரம்மோஸ் ஏவுகணைகள் 450 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து இலக்கை குறிப்பார்த்து அடித்து நொறுக்கியது. 450 கிலோமீட்டர் வேகம் என்பது ஒலியின் வேகத்தை விட சற்றே கூடுதல் தான்.

ஆனால் ஒலியை விட 5 மடங்கு அதிவேகமான அதன் வேகம் 6174 கிலோமீட்டர் ஆகும்!

தற்போது ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் பறந்து தாக்கும் வல்லமை ரஷ்யா உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருவதால் அவர்களது ராணுவ வலிமையை தகர்க்க முடியாது அமெரிக்காவும் இதர நாட்டோ அணி நாடுகளும் தவிர்த்துக் கொண்டிருக்கிறது.

நம் நாட்டில் உருவாகி வரும் ஒலியை விட 5 மடங்கு அதிவேக பிரம்மோஸ் அடுத்த சில ஆண்டுகளில் ராணுவ தேவைக்கு வந்து விட்டால் தற்போது கையில் இருக்கும் 450 கிலோ மீட்டர் வேக தயார் நிலையில் இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பழையனவாகவே மாறும் அல்லவா?

அதைக் கொண்டு ரூ.15,000 கோடி ஏற்றுமதி வருவாய் ஈட்டும் முடிவோடு தான் நாம் வியட்நாமுக்கு விற்க முடிவு செய்துள்ளோம்.

கத்தியை கூர் செய்து விற்றவுடன் வாங்கியவன் அதன் கூர்மையை சோதிக்க விற்றவரிடம் சோதிக்க துணியலாம்!

அப்படி நம்மிடம் வாங்கியவர் தாக்க ஏவினால் அதன் ஒலி சமிக்ஞையை நொடியில் உள்வாங்கி அது தாக்க வரும் பகுதிக்குள் வரும் பல நிமிடங்களுக்கும் முன்பே அதை விண்ணிலேயே அழித்து, தாக்குதலை முறியடித்து விடலாம்.

இப்படிப்பட்ட சிந்தனையுடன் நாம் நமது பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்று நமது பாதுகாப்பு திறனையும் வலுவாக்கி கொண்டிருக்கிறோம்.

இந்தியாவிடம் இருந்து வியட்நாம் வாங்க விருப்பம் தரும் முன்பே பிலிப்பைன்ஸ் நம்மிடம் வாங்க ரூ.3103 கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டது. விரைவில் சவுதி முதல் வேறு பிற சிறு நாடுகளும் நம்மிடம் ராணுவ தளவாடங்கள் வாங்க தயாராகி வருகிறார்கள்.

நமது உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வாங்க எகிப்து, அர்ஜென்டினா ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நமது தேஜஸ் போர் விமானங்கள் மிக இலகுவான எடை கொண்டது என்பதால் தேவைப்படும் இடத்தில் பணியாற்றி அதி விரைவில் அனுப்பி வைத்து விட முடியும்.

குறிப்பாக இயற்கை விபத்துப் பகுதிகளுக்கு எளிதில் உதவிப் பொருட்களை சென்று உதவிக்கரம் நீட்ட இது சரியான போர் ரக விமானமாக கருதப்படுவதால் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் தயாராக இருக்கிறார்கள்.

அது மட்டுமா? அமெரிக்காவும் கூட இந்திய விமானத்தை விலைக்கு வாங்கி தங்களது ராணுவ வலிமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு போர் வந்தால் நம்மால் ஒரு சில நாடுகளே நம்மால் 2 நாட்களுக்குள் மட்டுமே சமாளிப்போம் என்றிருந்த நிலை மாறி, நமது வல்லமை வல்லரசுகளுக்கு இணையாக உயர்ந்து விட்டது.

இந்த வல்லமையை நாம் பெற உடனிருந்து வருவது ரஷ்யா என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *