செய்திகள்

நந்தனத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு

சென்னை, ஏப்.28-

நந்தனத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 29-ந்தேதி (நாளை) முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

* வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று ‘டொயாட்டோ ஷோரூம்’ முன்பு ‘யூ டர்ன்’ போட்டு திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.

* செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று ‘டொயாட்டோ ஷோரூம்’ முன்பு ‘யூ டர்ன்’ செய்து திரும்பிச் சென்று சேருமிடத்தை அடையலாம்.

*பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று ‘டொயாட்டோ ஷோரூம்’-க்கு முன்னால் ‘யூ டர்ன்’ திரும்பி இலக்கை அடையலாம்.

இந்த மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சம்மந்தமாக ஆலோசனைகள் இருந்தால் dcpsouth.traffic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.