செய்திகள்

நத்தம் வேம்பார்பட்டி மாங்காய் குடோனில் திடீர் தீ விபத்து

Spread the love

நத்தம்,வேம்பார்பட்டி மாங்காய் குடோனில் திடீர் தீ விபத்து:

ரூ.7 லட்சம் பொருள் சேதம்

நத்தம், ஏப்,-02–

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பார்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 49). இவர் அந்த பகுதியில் மாங்காய் குடோன் வைத்திருக்கிறார். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் தனக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனங்களை குடோனில் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை குடோனில் திடீரென தீ பற்றி புகை கிளம்பி மளமளவென பரவியது. தகவல் அறிந்து அங்கு சென்ற நத்தம் தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். இதில் குடோனில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதன் மதிப்பு 7 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *