செய்திகள்

நத்தம் பகுதியில் தனிமை படுத்தப்பட்ட பகுதிகள்: திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு

நத்தம்-ஜுலை,03

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கொரானா தொற்று பாதித்த நபர்கள் வசிக்கும் ராக்காச்சிபுரம், காமராஜ் நகர், கோசு குறிச்சி, பிள்ளையார் நத்தம் ஆகிய இடங்கள் சுகாதாரத்துறையினரால் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுகின்றதா எனவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் உஷா, தாசில்தார் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி உள்ளிட்ட வருவாய், ஊரக வளர்ச்சி, பேரூராட்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *