செய்திகள்

நத்தம் அருகே தீ விபத்து குடிசை எரிந்து நாசம்

Spread the love

நத்தம், மே.12–

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி- பூசாரிபட்டியில் நாகூர்அம்மாள் என்பவரது குடிசை வீடு உள்ளது. இங்கு நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை முழுவதும் எரிந்து சாம்பாலாகியது. இதில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் தீயில் கருகியது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இதையொட்டி நேற்று அவரது வீட்டிற்கு நேரில் சென்ற நத்தம் யூனியன் சேர்மன் கண்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அண்ணா தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஷாஜகான், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், ஊராட்சிமன்ற தலைவர் கோகிலவாணி ராகவன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிமுக கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அறிவுறுத்தலின் படி நிதி உதவி வழங்கபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *