சென்னை,ஜன.10 –
காரை சாலை ஓரம் நிறுத்தி விட்டு நடைபாதையில் தூங்கிய கார் டிரைவர் ஜேசிபி எந்திரம் ஏறி உடல் நசுங்கி இறந்தார் . ஜேசிபி எந்திர ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
இறந்தவர் பெயர் குப்புராஜ் வயது 40. இவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்.
ஜேசிபி எந்திர ஓட்டுனர் அர்பக்சாவை போலீசார் கைது செய்தனர். இவர் சார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.