செய்திகள்

நடுவானில் விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

Makkal Kural Official

சென்னை, ஆக. 2–

கொல்கத்தாவில் இருந்து 170 பேருடன் இன்று சென்னைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது அதில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் அவதிப்பட்டு அலறித்துடித்தார். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு விரைந்த அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக நெஞ்சுவலியால் துடித்த பயணி, விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *