செய்திகள்

நடிகை ஜெயப்பிரதா பற்றி தரக்குறைவான பேச்சு: முலயம் சிங் கட்சி வேட்பாளர் மீது வழக்கு

லக்னோ, ஏப்.15–

நடிகை ஜெயப்பிரதா பற்றியும், பாரதீய ஜனதா குறித்தும் சர்ச்சைக்குரிய பேச்சு எதிரொலியாக சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக பதிலளிக்குமாறு ஆஸம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப மகளிர் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆசம் கான் பொதுக்கூட்டத்தில் பேசினார். ஜெயப்பிரதாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும், ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சந்திர மோகனும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆசம் கான் கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயப்பிரதா கூறியதாவது:–

சர்ச்சை புதிதல்ல

இது போன்ற சர்ச்சை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் வேட்பாளராக இருந்தேன். ஆனால் ஒருவர் கூட ஆசம் கூறியது தவறு என எதிர்த்தும், என்னை ஆதரித்தும் பேசவில்லை. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் என்ன கூறினார் என்பதையும் சொல்ல இயலவில்லை. நான் ஆசமிற்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வாறு பேச வேண்டும்?

ஆசம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்ன ஆகும்? என சிந்தியுங்கள். சமூகத்தில் பெண்களுக்கென இடமே கிடைக்காது. நாங்கள் உரிமைக்காக எங்கே போக வேண்டும்? நான் இறந்தால் நீங்கள் திருப்தியாக இருப்பீர்களா? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், நான் அவ்வாறு செய்யமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுஷ்மா கண்டனம்

ஆசாம்கானின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “சகோதரர் முலாயம் அவர்கள, நீங்கள் தான் சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைமை. ராம்பூரில் ஒரு திரவுபதி துயில் உரியப்படுகிறார். நீங்கள் பீஷ்ம பிதாமகனைப் போல் அமைதியாக இருந்து தவறிழைக்காதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், ஜெயாபச்சன் ஆகியோரையும் டேக் செய்திருக்கிறார்.

ஆசம்கான் மறுப்பு

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஆசம்கான், நான் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால் தேர்தலிலேயே போட்டியிடவில்லை. நான் எந்த ஒரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப்பேசவில்லை. அதனால் நான் எவரையும் அவமதிக்கவில்லை. நான் ராம்பூர் எம்எல்ஏவாக 9 முறை இருந்துள்ளேன். அதனால் எனக்கு எதைப்பேச வேண்டும் என்பது நன்றாகத் தெரியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *