செய்திகள்

நடிகை சரோஜா தேவி உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

Makkal Kural Official

பெங்களூரு, ஜூலை 15–

நடிகை சரோஜா தேவியின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது 87. கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகை சரோஜாதேவி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை 11:30 மணி வரை, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் சரோஜா தேவியின் சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்தில், ஒக்கலிகர் சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடந்தன. இதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மல்லேஸ்வரம் அருகே கொடிஹள்ளி தோட்டத்தில் அவரது கணவரின் கல்லறைக்கு அருகே அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *