செய்திகள்

நடிகை குஷ்புவை கண்டித்த பாஜக பொதுச்செயலாளர்

சென்னை, ஜூலை 8–

புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக, குஷ்பு பொது வெளியில் கருத்து தெரிவித்தது தவறு என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சராக பாஜக மாநில தலைவர் எல். முருகன் பதவி ஏற்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான, கமலாலயத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

குஷ்புவுக்கு கண்டனம்

அப்போது பேசிய அவர், புதிய அமைச்சரவையில் இளைஞர்கள் மற்றும் மகளிர் அதிகமாக இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, ட்விட்டர் மூலம் பொது வெளியில், கருத்து தெரிவித்தது தவறு என்றும், குஷ்புவுக்கு அதிருப்தி இருந்தால், அதை அவர் கட்சி தலைமையிடம் நேரடியாக தெரிவித்திருக்க வேண்டும் என்றும் கரு. நாகராஜன் கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக, 8 மாநிலங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டது குறித்து, நேற்று டுவிட்டரில் பதிவிட்ட பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா? ஏன் இந்த பாகுபாடு, இதை நான் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *