நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில்
திருமணம் : கோவாவில் நடந்தது
–––––––––––––––––––
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று ஆண்டனி தட்டில் நடந்தது. தனது திருமண படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுடன் இந்த உற்சாகமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். படங்களுடன் “#ForTheLoveOfNyke” என்று தனது மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினார்.
குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். கீர்த்தி தமிழ் பாரம்பரியப்படி மணப்பெண் உடை அணிந்திருந்தார். ரசிகர்களும், சமூக ஊடகத்தில் அவரைப் பின் தொடர்பவர்களும் அவரது சமூக ஊடகங்களில் வாழ்த்துச் செய்திகளை் பதிவு செய்தனர்.
‘‘வாழ்த்துக்கள் – கிட்டி அக்கா’’ என்று ரசிகர்கள் வாழ்த்துக்களைப் பதிவிட்டனர். ஒரு படத்தில், தம்பதி, தங்கள் மகிழ்ச்சியான நாளைக் கொண்டாடும் விதமாக ஒரு நாயுடன் இருந்தார்கள்.
ஆண்டனி தட்டிலோடு 15 ஆண்டுகளாக காதல் இருந்ததை வெளிப்படுத்தினார். இது எப்போதும்… ஆண்டனிxகீர்த்தி’’ என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.