சினிமா செய்திகள்

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று

மும்பை, ஏப். 2–

பிரபல நடிகை ஆலியா பட், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், 2012-ல் கரண் ஜோஹர் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2 ஸ்டேட்ஸ், டியர் ஜிந்தகி, ஹைவே, உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ஆலியா பட்.

இதுபற்றி அவர் கூறியதாவது:–

கொரோனாவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *