செய்திகள்

நடிகர் விவேக் தனியார் மருத்துவமனையில் திடீர் அனுமதி

சென்னை, ஏப். 16–

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல நகைச்சுவை நடிகரான விவேக், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்.

நடிகர் விவேக், அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *