நடிகர் தனுஷுக்கு கெட்ட காலம்
துவங்கிவிட்டது: நடிகை சுசித்ரா ஆசேவம்
–––––––––––––––––
சென்னை, நவ. 17–
நடிகர் தனுஷுக்கு கெட்ட காலம் துவங்கிவிட்டது என்று நடிகை சுசித்ரா கூறியுள்ளார்.
தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா –- விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் ரானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டிருக்கின்றனர். ஆனால், தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக விக்னேஷ் சிவன் கூறியதுடன் பிரச்னையை தீவிரப்படுத்தி வருகிறார். நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரிய அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், நடிகை சுசித்ரா நேர்காணல் ஒன்றில், “நயன்தாராவுக்கு பெரிய விசில். தனுஷ் ஒரு சைக்கோ. பல வழிகளில் நடிகைகளைப் பழிவாங்குவார். தன்னுடன் இசையவில்லை என்றால் பாலியல் தொல்லைகளைக் கொடுப்பதும் தொழில் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர். யாரடி நீ மோகினி படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு தனுஷ் தொல்லை கொடுத்திருக்கிறார். தன் படங்களில் நடிக்கும் அம்மா நடிகைகளைக்கூட விட்டுவைக்காமல் கொடுமை செய்தவர்.
தனுஷுடன் நடித்த நடிகைகளான பார்வதி, ஸ்ருதி ஹாசன், நஸ்ரியா உள்ளிட்டோரும் நயன்தாராவின் அறிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் படப்பிடிப்பில் தொல்லைகளைக் கொடுத்திருப்பார். தனுஷுக்கு கெட்ட காலம் துவங்கிவிட்டது. அவர் தற்கொலை செய்துகொள்ளலாம்.” என கடுமையாக தாக்கியுள்ளார்.