போஸ்டர் செய்தி

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: மாவட்ட பதிவாளர் உத்தரவு

சென்னை,ஜூன்.19–

நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23 -ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்கள்.

நேற்று அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. மேலும் நடிகர் சங்கத் தேர்தலை சென்னை நகர் பகுதியில் நடத்த அனுமதி தர முடியாது என நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தசூழ்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னரை சந்தித்தனர். கவர்னரை விஷால், நாசர், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் சந்தித்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு விட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2017–18 உறுப்பினர் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்கத்தில் முறைகேடாக நீக்கப்பட்டதாக 61 பேர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரிவான விசாரணைக்குப் பின்னரே இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் மாவட்ட பதிவாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *