சினிமா செய்திகள்

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா

சென்னை, ஏப்.18–

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை அதர்வா தொடங்கினார் . அதனை ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பிவிட்டார். அவருடன் ஒட்டுமொத்த படக்குழுவினரும் சென்னை திரும்பிவிட்டனர்.

சென்னை திரும்பிய சில நாட்களிலேயே, அதர்வாவுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அதர்வா செய்து கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் அதர்வா தனது டுவிட்டர் பதிவில்,

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையின் முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறேன். விரைவில் குணமடைந்து தனது பணிகளைத் தொடருவேன் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மாதவன், நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது குடும்பத்தினர், சுந்தர் சி, சோனு சூட், ரன்பீர் சிங், அமீர் கான், ஆலியா பட், பவன் கல்யாண், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *