சென்னை, செப் 24–
நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, மணிகண்டன், நடிகை சாய்பல்லவி, டைரக்டர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு ‘‘கலைமாமணி’’ விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல நாடகத்துறையில் காரைக்குடி நாராயணன், பூச்சி முருகனுக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மபூஷன் கே.ஜே. யேசுதாசுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.
கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் விழா நடைபெறும். இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.
மேலும், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகேச பாண்டியனுக்கு
பாரதியார் விருது
பாரதியார் விருது (இயல்) – முனைவர் ந. முருகேச பாண்டியன்
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) – பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்
பாலசரசுவதி விருது (நாட்டியம்) – பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்
அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் வழங்கப்படும்.
சிறந்த கலை நிறுவனம் – தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்)
சிறந்த நாடகக் குழு – கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம்.
சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
பாபநாசம் அசோக் ரமணி
2021–ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் வருமாறு:–
இயல் கலைத்துறையில் க. திருநாவுக்கரசு (எழுத்தாளர்), கவிஞர் நெல்லை ஜெயந்தா (இயற்றமிழ்க் கவிஞர்), எஸ். சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் (சமயச் சொற்பொழிவாளர்).
இசைத்துறையில் பாபநாசம் அசோக் ரமணி (குரலிசை), பா. சற்குருநாதன் ஓதுவார் (திருமுறைதேவார இசை), டி.ஏ.எஸ். தக்கேசி (தமிழிசைப் பாடகர்), திருச்சூர் சி.நரேந்திரன் (மிருதங்கம்), என். நரசிம்மன்
(கோட்டு வாத்தியம்), கோ. பில்லப்பன் (நாதசுர ஆசிரியர்), திருக்காட்டுப்பள்ளி டி.ஜே. சுப்பிரமணியன்
(நாதசுரம்), கல்யாணபுரம் ஜி. சீனிவாசன் (நாதசுரம்), திருவல்லிக்கேணி கே.சேகர் (தவில்).
நாட்டியத் துறையில் வழுவூர் எஸ்.பழனியப்பன் (பரதநாட்டிய ஆசிரியர்), பிரியா கார்த்திகேயன் (பரதநாட்டியம்).
நாடகத்துறையில் பூச்சி எஸ். முருகன் (நாடக நடிகர்), காரைக்குடி நாராயணன் (நாடக இயக்குநர்), என். ஏ. அலெக்ஸ் (ஆர்மோனியம்).
சூப்பர் சுப்பராயன்
திரைப்படத்துறையில் எஸ்.ஜே.சூர்யா (திரைப்பட நடிகர்), சாய் பல்லவி (திரைப்பட நடிகை), லிங்குசாமி (திரைப்பட இயக்குநர்), எம்.ஜெயகுமார் (திரைப்பட அரங்க அமைப்பாளர்), சூப்பர் சுப்பராயன் (திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்)
சின்னத்திரை துறையில் பி.கே. கமலேஷ் (சின்னத்திரை நடிகர்)
இசை நாடகத்துறையில் எம்.பி. விசுவநாதன் (இசை நாடக நடிகர்)
கிராமியக் கலைகள் துறையில் வீரசங்கர் (கிராமியப் பாடகர்), நா.காமாட்சி (பொய்க்கால் குதிரை ஆட்டம்), எம்.முனுசாமி (பெரியமேளம்), பி. மருங்கன் (நையாண்டிமேள நாதஸ்வரம்), கே.கே.சி. பாலு (வள்ளி ஒயில்கும்மி).
இதர கலைப் பிரிவுகள் துறையில் வே. ஜீவானந்தன் (ஓவியர்)
ஜெயஸ்ரீ வைத்தியநாதன்
2022–ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் வருமாறு:–
இயல் துறையில் சாந்தகுமாரி சிவகடாட்சம் (எழுத்தாளர்), தி.மு. அப்துல்காதர் (இலக்கியப் பேச்சாளர்),
சு. முத்துகணேசன் (சமயச் சொற்பொழிவாளர்)
இசைத்துறையில் ஜெயஸ்ரீ வைத்தியநாதன் (குரலிசை), சாரதா ராகவ் (குரலிசை), பகலா ராமதாஸ்
(வயலின்), நெய்வேலி ஆர். நாராயணன் (மிருதங்கம்), செம்பனார்கோயில் மோகன்தாஸ் (நாதசுரம்), சித்துக்காடு டி.ஜி. முருகவேல் (நாதசுரம்), திருக்கடையூர் டி.ஜி.பாபு (தவில்), சுசித்ரா பாலசுப்பிரமணியன் (கதா காலட்சேபம்).
நாட்டியத்துறையில் அமுதா தண்டபாணி (பரதநாட்டிய ஆசிரியர்), வி. சுப்பிரமணிய பாகவதர் (பாகவத மேளா), சுவாமிமலை கே.சுரேஷ் (பரதநாட்டியக் குரலிசை)
நாடகத்துறையில் பொன் சுந்தரேசன் (நாடக நடிகர்), கவிஞர் இரா. நன்மாறன் (நாடக இயக்குநர்), சோலை ராஜேந்திரன் (நாடகத் தயாரிப்பாளர்)
டைமண்ட் பாபு
திரைப்படத்துறையில் விக்ரம் பிரபு (திரைப்பட நடிகர்), ஜெயா குகநாதன் (திரைப்பட நடிகை), விவேகா (திரைப்பட பாடலாசிரியர்), டைமண்ட் பாபு (திரைப்பட செய்தித் தொடர்பாளர்), டி. லட்சுமிகாந்தன் (திரைப்பட புகைப்படக் கலைஞர்).
சின்னத்திரை துறையில் மெட்டிஒலி காயத்ரி (சின்னத்திரை நடிகை).
இசை நாடகத்துறையில் என். சத்தியராஜ் (இசை நாடக நடிகர்)
கிராமியக் கலைகள் துறையில் ந. ரஞ்சிதவேல் பொம்மு (தேவராட்டம்), மு. கலைவாணன் (பொம்மலாட்டம்), எம்.எஸ்.சி. ராதாரவி (தப்பாட்டம்), கே.பாலு (நையாண்டிமேள நாதஸ்வரம்).
இதர கலைப் பிரிவுகள் துறையில் ஆர். சாமிநாதன் (பண்பாட்டுக் கலை பரப்புனர்), கே.லோகநாதன்
(ஓவியர்).
2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் வருமாறு:–
ஸ்வேதா மோகன்
இயல் துறையில் கவிஞர் கே. ஜீவபாரதி (இயற்றமிழ்க் கவிஞர்)
இசைத்துறையில் ஆர். காசியப் மகேஷ் (குரலிசை), ஹேமலதாமணி (வீணை), வே.பிரபு (கிளாரினெட்), பி.பி. ரவிச்சந்திரன் (நாதசுரம்), ஞான நடராஜன் (நாதசுரம்), எம்.எஸ்.ஆர். பரமேஸ்வரன் (நாதசுரம்), ராமஜெயம் பாரதி (தவில்), பா. ராதாகிருஷ்ணன் (தவில்).
நாட்டியத்துறையில் க. தனசுந்தரி (பரதநாட்டிய ஆசிரியர்), வி. ஜெயப்பிரியா (குச்சுப்பிடி நாட்டியம்),
கே. ஹரிபிரசாத் (பரதநாட்டியக் குரலிசை).
நாடகத்துறையில் என். ஜோதிகண்ணன் (பழம்பெரும் நாடக நடிகர்), பெ. கதிர்வேல் (நாடக நடிகர்), வி.கே. தேவநாதன் (விழிப்புணர்வு நாடக நடிகர்).
நிகில் முருகன்
திரைப்படத்துறையில் கே.மணிகண்டன் (திரைப்பட நடிகர்), எம். ஜார்ஜ் மரியான் (குணச்சித்திர நடிகர்), அனிருத் (இசையமைப்பாளர்), ஸ்வேதா மோகன் (பின்னணிப் பாடகி), சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார் (நடன இயக்குநர்), நிகில் முருகன் (திரைப்பட செய்தித் தொடர்பாளர்).
சின்னத்திரையில் என்.பி. உமாசங்கர்பாபு (நிகழ்ச்சித் தொகுப்பாளர்), அழகன் தமிழ்மணி (நிகழ்ச்சி தயாரிப்பாளர்),
இசை நாடகத்துறையில் ஏ.ஆர்.ஏ. கண்ணன் (இசை நாடக நடிகர்), ஆர்.எம். தமிழ்ச்செல்வி (இசை நாடக நடிகை).
கிராமியக் கலைகள் துறையில் கே.எம். ராமநாதன் (தெருக்கூத்து), டி. ஜெகநாதன் (வில்லுப்பாட்டு), சி. மகாமணி (நையாண்டிமேள தவில்), ஆ. சந்திரபுஷ்பம் (கிராமியப் பாடல் ஆய்வாளர்).
இதர கலைப் பிரிவுகள் துறையில் சு. தீனதயாளன் (சிற்பி).
![]()





