கதைகள் சிறுகதை

நடவடிக்கை எடுப்போம் – ஜெ. மகேந்திரன்

Makkal Kural Official

‘‘எக்ஸ்கியூஸ்மி சார்’’

உள்ளே வரலாமா?

வாங்க.

சார்…

‘என்ன மீண்டும் சார்,

2001ல் பதிவு செய்துள்ளேன்.

வேலை விஷயமாக நன்றாக பதிவு செய்துள்ளீர்களா, புதுப்பித்தல் இடைவிடாது, பள்ளியில் உள்ளீர்களா?

ஆம், சார்

‘இந்தாங்க நற்சான்றிதழ்’,

சரி,

சரியாகப் பண்ணியிருக்கிறீர்கள், நடவடிக்கை எடுக்கறேன், எடுக்கறோம்.

சரி, சார் தேங்யூ.

வெளியில் அலுவலர் வேற வேலையில்ல சும்மா இடைவிடாது வந்துகொண்டு இருக்கிறார்கள் என அலுத்துக் கொண்டார் ஒரு பெண்மணி.

ஒரு 5 நாட்கள் கழித்து சார் உள்ளே வரலாமா?

‘தாரளமா வாங்க,

என்ன,

இன்னும் வேலை வரவில்லையா?

நான் செக்சனுக்கு அனுப்பியுள்ளேன். பார்க்கலாம். நீங்கள் அலைய வேண்டாம். சரியான நேரம் பார்த்து அனுப்புவோம்.

சரி சார்.

தேநீர் கடை, வாசலில் டேய் தினேஷ், அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போய்ப் பார்த்தேன்.

வேலையே அனுப்ப மாட்டேங்கிறாங்க . சரிடா, பார்ப்போம்.

என் நண்பன் தான் சரி ‘நாளைக்கு’ நீ சரியா 9 மணிக்கு காலை இங்கே இந்த தேநீர்க் கடைக்கு சர்டிபிகேட்டுடன் வந்திடு.

சரிடா.

‘‘டேய் பாஸ்கி, அதிகாரியைப் பார்த்தவுடன் ஒரு வணக்கம் வை. அது திருப்திகரமாக இருக்கும்.

‘சரி ’

தினேஷ் அதிகாரியை பார்தவுடன் வணக்கம் சொல்கிறான்.

சரிப்பா.

என்ன நீங்கள் உன் நண்பரா,

‘ஆம் சார்’ தினேஷ் கூற

இன்னும் சீனியரிடம் போகவில்லை,

அதற்காகத்தான், இப்படி,

சரிபா இன்டர்வியூ போடவில்லை.

சரி சார் உங்கள பார்த்துக் கொண்டு இருக்கச் சொல்கிறேன்.

சரி தபால்ல பாருங்க என பட்டும் படாதபடி அனுப்பி விட்டார்.

ஒரு மாதம் போனது.

மீண்டும் தினஷே், ‘என்னடா பாஸ்கி வேலை வந்ததா, இல்லடா.

சரி அனுப்புவாங்க, மனதை தளர விடாதே.

இல்லடா, ஒரு வேலை வந்தால், வீட்டுக்கு உபயோகமாக இருக்கும். அப்பா, ரிடையர் போலீஸ் ஆபீசர். ‘அப்பா, இருந்த காலத்தில் அவரால் ஒன்றும் பண்ண முடியவில்லை.

போலீசா இருந்து, எந்த அதிகாரமும் பண்ண முடியவில்லை. அவர் ஸ்டெயிட் ஃபார்வேர்டு.

சரி, பாஸ்கி,என்று

தினேஷ் கூற,

டேய் எதற்கும் ஜெராக்ஸ் காபி எடுத்து வைச்சுக்க.

டேய் பாஸ்கி, எனக்கு தெரிந்த அதிகாரி அங்கே இருக்கிறார். அவரைப் போய்ப் பார்ப்போம்.

வணக்கம் சார் வாங்க தினேஷ். இவன் என் நண்பர். வேலை கிடைக்கும் என உறுதியாக உள்ளான்.

வேலையா இடைவிடாது புதுப்பித்துக் கொண்டு வருகிறாரா?

ஆம் சார் தினேஷ்

சரி, நடவடிக்கை எடுக்கறேன்

பாஸ்கி, ஒவ்வொரு நாளும் தபால்காரரை பார்க்க தவறுவதே இல்லை.

போஸ்டுமேன் ‘ராஜா சார், தபால் உள்ளதா?

அரசாங்க வேலை, பாஸ்கி அவர்

தபால் வந்தால், கூப்பிட்டு தருகிறேன். ஒரு 6 மாதம் கழிந்தது. மீண்டும் அதிகாரியை பார்க்க அதிகாரி காத்திருக்க வேண்டும் எனச் சொல்லி விட்டார்.

பாஸ்கி என்னது நம்பிக்கை, விடா முயற்சி, உழைப்பு செய்தும் பயனில்லை.

மீண்டும் அதிகாரியைப் பார்க்க நடவடிக்கை எடுப்போம். இதே பதில்.

‘‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவது இந்த நாட்டிலே’’ என்ன பாடல் பாஸ்கிக்கும் அதிகாரிகளுக்கு கேவல பாடலாக ஒலித்துக் கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *