செய்திகள்

நடப்பாண்டும் ராகுல்காந்தி காங்கிரசுக்கு ஒளி கொடுத்தால் ஆட்சி மாற்றம் உறுதி

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் நம்பிக்கை

மும்பை, ஜன. 2–

கடந்த ஆண்டு ராகுல் காந்தி காங்கிரசுக்கு புதிய ஒளியினைக் கொடுத்ததை போலவே, இந்த ஆண்டும் தொடர்ந்தால், அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

சிவசேனையின் வாரப் பத்திரிகையான சாம்னாவில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி இருப்பதாவது:–

ராமர் கோயில் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதால் அதனைப் பற்றி பேசி வாக்கு பெற முடியாது. அதனால், லவ் ஜிகாத் என்ற புதிய விஷயம் கையிலெடுக்கப்பட்டது. லவ் ஜிகாத் என்ற ஆயுதம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மற்றும் இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிதா? நடிகை துனிஷா சர்மா மற்றும் ஷ்ரத்தா வால்கர் இறந்தது லவ் ஜிகாத் கிடையாது. அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அட்டுழியங்களை சந்திக்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் உறுதி

கடந்த 2023-ஆம் ஆண்டில் நாட்டின் நம்பிக்கையில் எந்த ஒரு அச்சமும் இல்லை. ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் பலனளிக்கும் என நம்புகிறேன். 2022-ஆம் ஆண்டில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸிக்கு புதிய ஒளியைக் கொடுத்தது. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இந்த ஆண்டும் அப்படியே தொடர்ந்தால் அடுத்த 2024 பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நம்மால் பார்க்க முடியும். இன்றைய ஆளும் அரசாக இருக்கும் பாஜக எதிர்க்கட்சிகள் இருப்பதை அங்கீகரிப்பதில்லை என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரிவினைவாதம், வெறுப்புணர்வை பரப்பக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *