சிறுகதை

நடப்பது வேறு – ராஜா செல்லமுத்து

சேகர் கொஞ்சம் சிக்கனமானவன் தான் .அதற்காக யாருக்கும் எதுவும் கொடுக்காமல் இருக்கும் கஞ்சப் பயல் அல்ல. அள்ளிக் கொடுக்கும் வள்ளலும் அல்ல. அவனுடைய சக்திக்கு எது முடியுமோ ? அதைச் செய்வான்.

தான் சந்திக்கும் நபர்களில் நல்லவர், கெட்டவர் என்பதை அவனால் நிச்சயமாக உறுதிப்படுத்திச் சாெல்ல முடியும் .

எந்த ஒரு மனுசன் பேசும் போது அவங்க கண்ணக் கவனிச்சா கண்டிப்பா அவங்க உண்மை பேசுறாங்களா? இல்ல பொய் பேசுறாங்களான்னு தெரியும். ஒரு மனிதனை எடை போடும் வித்தை இது தான் என்று சொல்லிக் கொள்வான் சேகர் .

பூங்காவில் ஒரு முறை காேபால் என்ற நண்பரைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அந்த நண்பர் வறுமையில் இருக்கிறார் என்பது சேகருக்கு தெரியும்.

ஆனால் அவரின் வறுமையைச் சொல்லாமலே அவருக்கு உணவு வாங்கி கொடுத்தான் சேகர். சாப்பிட்டவர் சேகரை மனதார வாழ்த்தினார்.

கேட்காமலே எனக்கு செஞ்சது ரொம்ப சந்தோசம் . உன்ன எப்படி பாராட்டுறது ? என்று தெரியவில்லை என்று சேகரை பாராட்டினான் அந்த பூங்காவில் இருந்த கோபால்.

இருக்கட்டும் .இதுல என்னங்க இருக்குது .இல்லாத ஒருத்தவங்களுக்கு செய்றது தப்பில்ல என்று உத்தரவாதம் பேசினான்.

மறுநாள் அதே பூங்காவிற்குச் செல்லும்போது ,சாப்பிடும் மதிய நேரத்தை அனுசரித்து கோபால் சேகருக்கு போன் பண்ணினான்.

அந்தப் பூங்கா காலையில் திறந்தால் இரவு தான் நடை சாத்தும் பழக்கம் இருந்தது.

அதனால் கோபால் அங்கு படிப்பதும் அங்கே இருப்பதுமாய் இருந்தான்.

ஒரு நாள் சாப்பாடு வாங்கிக் கொடுத்த சேகர் மறுநாள் கோபால் போன் செய்யவும் .

இந்த மனுசங்களே இப்படித்தான் ஏதோ ஒரு நாள் சாப்பாடு வாங்கி கொடுத்தோம்னா? அத மறந்துட்டு போக மாட்டாங்க. கரெக்டா மதியம் ஒரு மணிக்கு போன் பண்ணுறது தப்பு. இன்னைக்கும் சாப்பாட்டுக்கு அடிபோடுறாங்க பாேல, இதெல்லாம் என்ன பொழப்பு என்று தனக்குள் அவனைப் பேசிக் கொண்டான் சேகர்.

இரண்டாவது முறை போன் செய்தால் சேகர் ஏதும் தவறாக நினைப்பார் என்று நினைத்த கோபால் இரண்டாவதாக சேகருக்கு போன் செய்யவில்லை .

வேண்டாம் என்று விட்டுவிட்டான்.

அப்பா மறுபடியும் போன் பண்ணி நம்மள தொந்தரவு செய்யல. நல்லதா போச்சு .இல்லன்னா இன்னைக்கும் நமக்கு சாப்பாட்டு செலவு செஞ்சு அழிச்சிடுவோம் என்று தனக்குத்தானே திருப்தி பட்டுக் கொண்டான் சேகர்

அன்று மதியம் பூங்காவுக்குப் போவதைத் தள்ளிப்போட்டு விட்டு சாயங்காலம் போய் ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விடலாம் என்று நினைத்துக் காெண்டான்.

அப்பாேது சேகருக்கு நண்பர் துரை போன் செய்தான்.

என்ன சேகர் எங்கே இருக்கீங்க? என்று கேட்டான்.

இங்கதான் வீட்டுக்கு பக்கத்துல இருக்கேன் என்று பதில் சொன்னான் சேகர்.

வாங்க வெளில போயிட்டு வரலாம் என்று துரை கூப்பிட்ட போது

எங்க என்று சேகர் கேட்டதற்கு

ஏன் சொன்னா தான் வருவீங்களா ? வண்டியில் ஏறுங்க என்று தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டான் துரை

எங்கே செல்கிறோம் என்று சொல்லாத துரை, தன்னுடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு பிரதான ஓட்டல் வாசலில் நிறுத்தினான்.

இது எதற்கு என்று சேகருக்கு விளங்கவில்லை.

எதற்கு நேரம் ஓட்டலுக்கு கூப்பிட்டு போகிறான்? என்று அறியாத சேகரை அந்த உயர்தர ஓட்டலுக்குப் பாேய் சாப்பிட்டால் நிறைய பணம் வருமே ? என்ன செய்வது என்று யாேசித்தான் சேகர்.

என்ன வாங்க சேகர் உக்காருங்க .என்ன வேணாலும் சாப்பிடுங்க. நான் உங்களுக்கு ரொம்ப நாளா ட்ரீட் கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். இன்னைக்கு தான் அமஞ்சது. நீங்க எது வேணாலும் சாப்பிடலாம் கூச்சப்படாம சாப்பிடுங்க என்று தாராளமாக சொன்னான் துரை .

இதைக் கேட்ட சேகருக்கு ஆனந்தம் .மேஜைக்கு வந்த அசைவ உணவு வகையில் அத்தனையும் உயர்தர உணவாக இருந்தது.

அப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவன் மூளையில் சுளிர் என்று உரைத்தது.

பூங்காவில் இருக்கும் கோபாலுக்கு ஒரு நாள் சாப்பாடு வாங்கி கொடுத்தோம் . மறுநாள் நாம் அவர் போன் செய்வதை எடுக்கவில்லை ; தவறாக நினைத்தோம்.

ஆனால் இன்று துரை நமக்கு இவ்வளவு செய்கிறானே . இவ்வளவு பணத்திற்கு நாம் சாப்பிடுகிறோம். இதுவெல்லாம் நாம் செய்த முன்பு செய்த நற்செயலின் பலன்.

நேற்று ஒருவருக்கு சாதாரண சாப்பாடு வாங்கி கொடுத்தோம். இன்று அசைவ அறுசுவை உணவு கிடைக்கிறது ?

நாம் கோபாலை நினைத்தது தவறு; நாம் செய்யும் செயலுக்கு உடனடியாக பிரதிபலன் கிடைக்கிறது என்றால், நாம் அடுத்தடுத்து மற்றொருவருக்கு உதவி செய்தால் , என்னென்ன திரும்ப கிடைக்கும் என்று தன் மனதுக்குள் எழுந்த குற்ற உணர்வை சரி செய்து கொண்டான் சேகர்

அன்று இரவு கோபாலைப் பார்க்க செல்லும் போது டிபன் வாங்கிப் பாேனான் சேகர்.

சேகரின் வருகை எதிர்பார்த்து காத்திருந்த கோபால் சேகரை பார்த்ததும்

என்ன சேகர், நேத்து உனக்கு நான் மதியம் உனக்கு நான் போன் பண்ணேன் எடுக்கல. ஏதோ வேலையா இருந்திருப்பன்னு நினைக்கிறேன்.

என் கிட்ட கொஞ்சம் பணம் வந்தது சேகர் நீயும் நானும் நல்லா சாப்பிடலாம் அப்படி நினைச்சு தான் உனக்கு நான் போன் பண்ணுனேன். நீ எடுக்கல.

ஆனா எப்படியும் இரவு வருவ? அப்படின்னு தெரிஞ்சுதான் அசைவ உணவு வகைகள் உனக்காக நான் வாங்கி வச்சிருக்கேன். வா சாப்பிடலாம்.

நீ ஒரு நாள் எனக்கு உணவு வாங்கி கொடுத்ததாய்., அதை நான் எப்பவும் வாழ்க்கையில மறக்க மாட்டேன்.

வா சாப்பிடலாம் என்று மறுபடியும் சேகரைக் கூப்பிட்டான், காேபால்.

இதற்கு முன் கோபால் நம்மை சாப்பிடுவதற்கு தான் அழைத்து செலவழிக்க வைக்கப் போகிறான் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் அவனோ நமக்கு இவ்வளவு உயர்ந்த அசைவ உணவு வாங்கி வைத்திருக்கிறான் என்று நினைத்தபோது அவனுடைய உள்ளம் குறுகியது. அவன் கையில் வாங்கி வைத்திருந்த டிபனை மறைத்தான்.

இப்போது சேகர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

கோபால் அசைவ உணவு வகைகளை பிரித்தபடியே

சாப்பிடு வா சேகர் ரெண்டு பேரும் சேந்தே சாப்பிடலாம் வா என்று சொன்னபடியே இலைகளை விரிக்க ஆரம்பித்தான்.

கோபாலின் அன்பு சேகரை திணறடித்தது. இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

இப்பாேது சேகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *