செய்திகள்

நடந்து வந்து வாக்களித்த நடிகர் விக்ரம்

சென்னை, ஏப். 6–

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை நடந்து வந்த நடிகர் விக்ரம், இயந்திர கோளாறு காரணமாக, காத்திருந்து வாக்களித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும், காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரி அனைவரும் வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

காத்திருந்த விக்ரம்

அந்தவகையில், சினிமா பிரபலங்களான நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஆகியோர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை வாக்களிக்க நடந்தே வந்துள்ளார். ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர் வாக்களிக்க முடியாமல் பொதுமக்களுடன் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் வாக்களித்து சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *