சூரிய ஒளி தான் சிறந்த மாற்று சக்தி. இந்த சக்தியை மலிவான செலவில் மின்சாரமாக மாற்றி பயன் பெறலாம். 80 சதவீத நோய்களும் தண்ணீர் மாசு அடைவதால் ஏற்படுகிறது. நானோ தொழில் நுட்பம் மூலம் நச்சுத் தண்ணீரை குடிநீராக மாற்றும் ஆராய்ச்சி, இன்று உலகம் முழுக்க நடைபெற்று வருகிறது.
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களால் நீர் நிலைகள் அதிகளவில் மாசடைந்து வருகிறது. அசுத்தமான தண்ணீரில் உள்ள கிருமிகள், நச்சுப் பொருட்களை சுத்திகரிக்கவும் நானோ டெக்னாலஜியில் தீர்வு உள்ளது. ஆனாலும் இப்பிரச்னைக்கான தீர்வு பெரும் சவால் ஆகவே உள்ளது.
பல்கலை யில் உள்ள நானோ தொழில் நுட்ப துறையில் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கான நவீன உபகரணங்களை வாங்க, தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. பல்கலை சார்பில் இத்துறைக்கு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை தவிர, அத்துறை பேராசிரியர்கள் நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் ஆராய்ச்சி நடத்த பல்கலை மானியக்குழு, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், தகவல் தொழில் நுட்பத் துறை ஆகியவற்றில் இருந்து நிதியுதவி பெற்று வருகின்றனர்.
ஆராய்ச்சி தொடர்பாக டி.ஆர்.டி.ஓ., பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள், அமெரிக்கா, சிங்கப்பூர் பல்கலைக் கழகங்களுடன் பாரதியார் பல்கலைக்கழக இணைந்து செயல்பட்டு வருகிறது.
நாட்டை மிரட்டி வந்த பன்றிக் காய்ச்சல் போல், இனி எதிர்காலத்தில் மேலும் பல பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடலாம். புதிய தொழில் நுட்பம் மற்றும் மருந்துகளை கண்டுபிடித்து அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண நானோ தொழில் நுட்ப அறிவியலாளர் ஆராய்ந்து வருகிறார்கள்.