குமாரசாமியின் புதல்வி சகுந்தலா, நல்ல படிப்பு, திறமை எல்லாம் இருந்தது. ஆனால் அழகு குறைவான பெண். மாப்பிள்ளை அவளுக்கு அமைவது சிரமமாகவே இருந்தது. குமாரசாமியும் 2 இடங்களில் டெக்டைல்ஸ் ஷோரூம் எலக்ட்ரிக்கல்ஸ் கடையும் நடத்தி வந்தார். நன்றாக நடந்து வந்தது.
மோகன்தாஸ் என்ற இளைஞன் அவர் கடைக்கு வேலையில் சேர்ந்தான். நல்ல சூட்டிகையும் அழகும் படிப்பும் அவனிடம் இருந்தது. எல்லோரையும் கவரும் பேச்சுத் திறமையும் அவனிடம் இருந்தது. வியாபாரம் பெறுகியது. குமாரசாமிக்கும் அவனை பிடித்துப்போய் விட்டது. தன் மகள் சகுந்தலாவை அவனுக்கு திருமணம் செய்து வைத்து தன் கடையையும் நிர்வகிக்கச் செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்.
மோகன்தாஸ் சம்மதித்து விட்டான். குமாரசாமி ஒரு முகூர்த்தத்தில் திருமணம் முடித்து வைத்தார். சென்னையிலும் 2 பெரிய டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரும் ஒரு பெரிய டெக்ஸ்டையில் கடையும் வைத்துக் கொடுத்தார். நன்றாகவே நடந்தன.
வியாபாரத்தை திறம்பட நடத்தி வந்தான் மோகன்தாஸ். குமாரசாமியின் உதவியுடன் ஒரு வீடும் வாங்கி விட்டான். பிரதீப் என்ற பையனும் பிறந்தான். வாழ்க்கை சுமுகமாகவே ஓடிக் கொண்டிருந்தது…..
அழகி பாலாமணி அந்த கம்பெனியில் நுழையும் வரை….
பாலாமணி நல்ல திறமை, அழகும் வாய்க்கப் பெற்றவர். மோகன்தாஸ் அவளிடம் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. மோகன்தாஸ் பாலாமணியிடம் மனம் மயங்கினான். பாலாமணியும் அவனின் கவர்ச்சிகரமான பேச்சுக்கு மயங்கினான்.
முதலில் சினிமா, பீச்சென்று ஆரம்பித்தனர். சகுந்தலா அவனைக் கண்டித்தாள். ஆனால் அவளின் பேச்சு எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல வீட்டிற்கு வருவதையே நிறுத்தி விட்டான். பாலாமணியுடன் தனி வீடு பிடித்து குடித்தனமே நடத்த ஆரம்பித்து விட்டான். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பள்ளியில் சேர்க்கும்போது தந்தை பெயர் என்ற இடத்தில் மோகன்தாஸ் என்றே குறிப்பிட்டிருந்தான்.
ஒரு தடவை மோகன்தாஸ் வீட்டிற்கு வந்தான். சகுந்தலா கண்டிப்புடன் சொல்லிவிட்டாள். இனி இந்த வீட்டிற்கு வரக் கூடாது. சகுந்தலா என்ற நங்கூரம் செயல்படுவரை நீங்கள் வேற்று மனிதர் தான். அப்படியே வருவதாக இருந்தால் இந்த நங்கூரத்தின் மீது கட்டுப்படுவதாகத் தான் வரவேண்டும் என்றாள். மோகன்தாஸ் திரும்பி விட்டான். பாலாமணியின் கணவனாக மட்டுமே நடந்து கொண்டு வாழ்ந்து வந்தான்.
காலங்கள் உருண்டோடின. பிரதீப் கல்லூரியில் சேர்ந்து விட்டான். ஒரு பொங்கலுக்கு புதுத் துணி வாங்க ‘சகுந்தலா டெக்ஸ்டைலுக்கு’ போனார்கள். அதே சமயம் பாலாமணியும் தன் மகள் ஜோதிகாவுடன் கடைக்கு வந்தார்கள்.
சகுந்தலா உள்ளே நுழைந்தவுடன் மோகன்தாஸ் சேரிலிருந்து வேகமாக இறங்கி வந்தான். அவன் தன் மகனை ஆசையுடன் பார்த்தான். அவனுக்கு வேண்டியவற்றை தானே எடுத்துக் கொடுத்தான். இவன் செய்கைகள் அனைத்தையும் கவினத்து வந்தாள் ஜோதிகா. பிறகு தனக்கு வேண்டியதை எடுத்தவுடன் பாலாமணியும் ஜோதிகாவும் வெளியேறினார்கள். ஒரு பழையவர் வேலை பார்த்து வந்த ஊழியர் மட்டும் இவற்றையெல்லாம் கவனித்து வந்தார்.
ஜோதிகாவும் பாலாமணியும் வெளியே வந்தவுடன், ஜோதி தன் அம்மாவிடம் கேட்டாள். ‘ஏன் அம்மா தன் அப்பா இப்படி நடந்து கொள்கிறார்’ நம்மையெல்லாம் கவனிக்கவேயில்லை. அந்த பெண்ணையும் அந்தப் பையனை மட்டும் இப்படிக் கவனிக்கிறார். ஏதாவது இருவருக்கும் தொடர்பு இருக்குமா? என்று குமுறிக் கொண்டு கேட்டாள். பாலாமணி மட்டும் மகளை அடக்கிவிட்டு பேசாமல் வா என்றாள்.
பாவம், மகளுக்கு என்ன தெரியும் . நாம் தான் இடையில் ஒட்டிக் கொண்டவர்கள். அந்தப் பெண் சகுந்தலா தான் முதன்முதலில் மோகன்தாஸை கரம் பிடித்தவள்!
இந்தக் கடை உரிமையாளரே அவள் தானே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே போனாள் பாலாமணி .