செய்திகள்

நகரப் பேருந்துகளில் 3 நாட்களில் 78 லட்சம் மகளிர் கட்டணமில்லா பயணம்

சென்னை, ஜூலை 16–

கடந்த 3 நாட்களில் நகரப் பேருந்துகளில் 78 லட்சம் மகளிர், கட்டணமில்லா பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், முதல்வரின் உத்தரவின்பேரில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அடையாள பயணச்சீட்டு கடந்த 12–ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

14–ந்தேதி வரையில் கடந்த 3 நாட்களில், 7,291 நகரப் பேருந்துகளில், 78 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். 40% மகளிர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு, தற்போது 60% வரை மகளிர் பயணம் செய்கின்றனர். திருநெல்வேலி கோட்டத்தில் மட்டும் 68% மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

14–ந்தேதி அன்று மட்டும் 28 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், கடந்த 3 நாட்களில் 5,741 திருநங்கையர்கள், 51,615 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 8,356 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். இத்திட்டத்தினால் மகளிருக்கு பணச் செலவு மிச்சமாகிறது. அந்த மிச்சமாகும் பணத்தை குடும்பச் செலவுக்கு பயன்படுத்துகின்றனர்.

மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்திற்கு, பொது மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *