நல்வாழ்வுச் சிந்தனைகள்
குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையது. இதன் இலை வாந்தியை உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலமிளக்கியாகப் பயன்படுகிறது.
தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது. குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும். குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் மற்றும் கொழுப்பைக் குறைக்கும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.